Hyundai Creta: ஹுண்டாய் கிரேட்டா - ஃபேஸ்லிப்ட் - என் லைன் கார் மாடல்கள்- விலை, இன்ஜின் ஒப்பீடு? எது பெஸ்ட்..!
Hyundai Creta vs Creta Facelift vs N Line Comparison: ஹுண்டாயின் கிரேட்டா கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் என் லைன் உள்ளிட்ட, 3 கார் மாடல்களின் ஒற்றுமை வேற்றுமைகளை இந்த தொகுப்பில் அறியலாம்
Creta Vs Creta Facelift Vs N Line: ஹுண்டாயின் கிரேட்டா கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் என் லைன் உள்ளிட்ட, 3 கார் மாடல்களின் இன்ஜின் மற்றும் விலை தொடர்பான ஒப்பீடுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
ஹுண்டாய் கிரேட்டா கார் மாடல்:
இந்தியாவில் மிட்-சைஸ் SUV பிரிவில் ஹுண்டாய் நிறுவனத்தின், கிரேட்டா கார் மாடல் அபார வளர்ச்சி கண்டுள்ளது. விற்பனையிலும் பெரும்பங்கை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஹூண்டாய் கிரேட்டா, உள்நாட்டில் மிகவும் வெற்றிகரமான SUVகளில் ஒன்றாகும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கிரேட்டா கார் இந்திய சந்தையில் விற்பனையாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கிரேட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகமானது. அதுவும் வடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கிரேட்டா என் லைன் எடிஷன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது, ஸ்டேண்டர்ட் கிரேட்டா, கிரேட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் என் லைன் ஆகிய 3 வகையான கார்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் என்ன என்பது கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.
கிரேட்டா கார் மாடல்களின் விலை ஒப்பீடு:
- கிரேட்டா ஸ்டேண்டர்ட் கார் மாடலானது இந்திய சந்தையில் E, EX, S, S(O), SX, SX Tech மற்றும் SX(O) ஆகிய 6 டிரிம்களில் கிடைக்கிறது. இதன் விலை 10 லட்சத்து 99 ஆயிரத்து 900 ரூபாய் தொடங்கி, 20 லட்சத்து 14 ஆயிரத்து 900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கிரேட்டா ஃபேஸ்லிப்ட் கார் மாடலானது E, EX, S, S(O), SX, SX Tech மற்றும் SX(O) ஆகிய 7 டிரிம்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை 10 லட்சத்து 99 ஆய்ரத்து 900 ரூபாயாகவும், டாப் எண்ட் வேரியண்டின் விலை 19 லட்சத்த்து 99 ஆயிரத்து 900 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கிரேட்டா என் லைன் கார் மாடலானது N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை 16 லட்சத்து 82 ஆயிரத்து 300 ரூபாயாகவும், அதிகபட்சமாக 20 லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டா கார் மாடல்களின் பவர்டிரெயின் ஒப்பீடு:
- ஸ்டேண்டர்ட் கிரேட்டா மாடலில் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. அதோடு, 1.5 லிட்டர் VGT டீசல் இன்ஜின் 115 PS மற்றும் 250 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. 1.4 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் 140 பிஎஸ் மற்றும் 242 என்எம் டார்க்கை வழங்கும். மூன்று என்ஜின்களும் நிலையான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகின்றன. மேலும், IVT (1.5-லிட்டர் பெட்ரோல்) தானியங்கி டிரான்ஸ்மிஷன், 1.5-லிட்டர் VGT டீசல் இன்ஜினுக்கு 6 ஸ்பீட் டீசல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.4-லிட்டர் டர்போ GDI பெட்ரோல் இன்ஜினுக்கு DCT டிரான்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
- ஹூண்டாய் கிரேட்டா ஃபேஸ்லிஃப்டில் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் (115PS மற்றும் 144Nm), 1.5 லிட்டர் Kappa Turbo GDi பெட்ரோல் (160PS மற்றும் 253Nm) மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் (116PS மற்றும் 250Nm) ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதில் 1.5-லிட்டர் MPi பெட்ரோல் இன்ஜின் ஆனது 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது IVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. 1.5-லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் இன்ஜின் ஆனது 7-ஸ்பீட் DCT ஆட்டோமேடிக் மற்றும் 1.5-லிட்டர் U2 CRDi டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- 2024 ஹூண்டாய் கிரேட்டா என் லைனின் N8 மற்றும் N10 ஆகிய இரண்டு வகைகளும் 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. அதோடு, 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய 2 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.