மேலும் அறிய

Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?

Hyundai Creta SUV Drawbacks: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்களின் கிங் என வர்ணிக்கப்பட்டாலும், ஹுண்டாய் க்ரேட்டா கார் மாடலில் உள்ள குறைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai Creta SUV:  ஹுண்டாய் க்ரேட்டா கார் மாடலின் விலை உள்ளூரில் ரூ.10.91 லட்சத்தில் தொடங்கி ரூ.20.11 லட்சம் வரை நீள்கிறது.

எஸ்யுவிக்களின் கிங் - ஹுண்டாய் க்ரேட்டா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் ஹுண்டாயின் க்ரேட்டா மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. நகர பயன்பாடு, குடும்பத்துடன் பயணிக்க ஏற்றது, போட்டித்தன்மை மிக்க விலையில் ப்ரீமியம் அம்சங்கள் என பல தரப்பட்ட காரணமாக ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் எஸ்யுவி ஆக க்ரேட்டா திகழ்கிறது. அறிமுகமாகி ஒரு தசாப்தம் ஆன பிறகும் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவிக்களின் பட்டியலில் இது முதன்மையாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாகவே எஸ்யுவிக்களின் கிங் என வர்ணிக்கப்படுகிறது. ஆனால், இதில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணமாகவே மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் பிரிவி வேறு சில கார்களும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் க்ரேட்டாவில் இருக்கக் கூடிய முக்கிய பிரச்னைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹுண்டாய் க்ரேட்டா - முக்கிய குறைபாடுகள்

1. விலையுயர்ந்த டாப் வேரியண்ட்கள்: 

அனைத்து அம்சங்கள் மற்றும் வசதிகள் அடங்கிய டாப் வேரியண்ட்களின் விலை ரூ.20 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற அதிகப்படியான விலை வரம்பில் தான் கிடைக்கிறது. அந்த விலையில் பெரிய மற்றும் செயல்திறன் சார்ந்த எஸ்யுவிக்கள் மாற்று ஆப்ஷனகளாக பரிசீலிக்கப்படுகின்றன.

2. பாதுகாப்பு அம்சங்கள்

2026ம் ஆண்டு க்ரேட்டா எடிஷனில் லெவல் 2 ADAS போன்ற ப்ரீமியம் பாதுகாப்பு அம்சங்கள் டப் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

3. பின்புற இருக்கை பிரச்னை

இரண்டாவது வரிசை அதாவது பின்புற இருக்கைகள் உயரமான பயணிகளுக்கு சவுகரியமாக இல்லை என கூறப்படுகிறது. 

4. போக்குவரத்து நெரிசலுக்கு பொருந்தாத டர்போ DCT

டர்போ பெட்ரோல் DCT எடிஷனானது வேகமானது மற்றும் நல்ல பயண அனுபவத்தை வழங்குகிறது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனத்தை நிறுத்தி நிறுத்தி ஓட்டுவதற்கு இது உகந்ததாக இல்லை என கூறப்படுகிறது.

5. குறைந்த வேரியண்ட்கள்

க்ரேட்டாவின் லைன் - அப்பை எளிமைப்படுத்தும் வகையில் 2026ம் ஆண்டு எடிஷனில் SX Tech SX(O) போன்ற ட்ரிம்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் சில அம்சங்கள் இடம்பெறக்கூடிய கலவையிலான வேரியண்ட்களை இனி தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்

யாருக்கு க்ரேட்டா பொருந்தாது?

  • ஷார்ப் ஹேண்ட்லிங், வேகமான ஸ்டியரிங் ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு க்ரேட்டா பொருத்தமானதாக இருக்காது
  • திட்டவட்டமாக 5 பேருக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் 6-7 பேர் அடங்கிய பெரிய குடும்பங்கள் பயணிக்க க்ரேட்டா கண்டிப்பாக பொருந்தாது
  • க்ரேட்டாவில் நல்ல க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இருந்தாலுமே, இது உண்மையான ஆஃப்-ரோட் எஸ்யுவி கிடையாது. 4 வீல் ட்ரைவ் ஆப்ஷனும் கிடையாது
  • பெட்ரோல் எடிஷன்கள் கனிசமான மைலேஜை வழங்கினாலும், எரிபொருள் செலவை குறைப்பது உங்களது இலக்காக இருந்தாலும் ஹைப்ரிட் மற்றும் மின்சார எடிஷன் நல்ல தேர்வாக இருக்கும்
  • க்ரேட்டாவின் டாப் வேரியண்ட்கள் விலையுயர்ந்தவையாக உள்ளன. அதே அளவிலான அம்சங்கள் கொண்ட சில போட்டி கார் மாடல்கள் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது
  • குறைந்த விலையில் நவீன ADAS அம்சங்களை பெற வேண்டும் என விரும்புவோருக்கு க்ரேட்டா பொருத்தமானதாக இருக்காது

க்ரேட்டாவிற்கான மாற்று ஆப்ஷன்கள்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் போட்டித்தன்மை கொண்ட பிரிவாக மிட்-சைஸ் எஸ்யுவி இருப்பதால், க்ரேட்டாவிற்கு ஏராளமான மாற்று ஆப்ஷன்கள் உள்ளன. அந்த வகையில், கியா செல்டோஸ், மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவை பிரதான போட்டியாளர்களாக உள்ளன. இவற்றில் தேவை, எதிர்பார்ப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை பரிசீலித்து உங்களுக்கான சரியான மிட்-சைஸ் எஸ்யுவியை தேர்வு செய்துகொள்ளலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 255 கி.மீட்டர் மைலேஜ்.. வந்துருச்சு Avore EX2 இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 255 கி.மீட்டர் மைலேஜ்.. வந்துருச்சு Avore EX2 இ பைக் - விலை எவ்ளோ?
Honda Activa: ரூ.10 ஆயிரம் போதும்; EMI-ல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவது எப்படி? மைலேஜ்?
Honda Activa: ரூ.10 ஆயிரம் போதும்; EMI-ல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவது எப்படி? மைலேஜ்?
Tata Punch EV: விலையோடு சேஃப்டியும் முக்கியம்ல.. டாப் டக்கரில் டாடா பஞ்ச் EV Facelift கார்: பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்!
Tata Punch EV: விலையோடு சேஃப்டியும் முக்கியம்ல.. டாப் டக்கரில் டாடா பஞ்ச் EV Facelift கார்: பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்!
மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாமா? வேண்டாமா? நல்ல மைலேஜ் கொடுத்தாலும் 3 பிளஸ் & மைனஸ் இருக்கு? - அது என்ன?
மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாமா? வேண்டாமா? நல்ல மைலேஜ் கொடுத்தாலும் 3 பிளஸ் & மைனஸ் இருக்கு? - அது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Embed widget