சென்னையில் டாடா பன்ச் ஆன்-ரோட் விலை எவ்வளவு? EMI விவரங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

சென்னையில் டாடா பன்ச் அடிப்படை மாடல் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.5.70 லட்சம் முதல் தொடங்குகிறது

சாலை வரி, காப்பீடு உள்ளிட்ட கட்டணங்களுடன் சேர்த்து அடிப்படை மாடலின் ஆன்-ரோட் விலை சென்னையில் சுமார் ரூ.6.89 லட்சமாக உள்ளது

டாடா பஞ்சை தவணை முறையில் வாங்க 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் செலுத்த வேண்டும்

ஒரு லட்சம் முன்பணம் செலுத்தினால் மீதமுள்ள ரூ.5.89 லட்சத்தை வங்கியில் கடனாக பெறலாம்

வங்கிகள் தற்போது 8.5 சதவிகிதம் முதல் 9.5 சதவிகிதம் ஆண்டு வட்டி விகிதம் வசூலிக்கின்றன

ஐந்தாண்டு காலத்திற்கு 9 சதவிகித வட்டியுடன் ரூ.5.89 லட்சம் கடனாக பெற்றால் மாதத்திற்கு ரூ.12,227 EMI செலுத்த வேண்டும்

7 வருட காலத்திற்கு 9 சதவிகித வட்டியுடன் ரூ.5.89 லட்சம் கடனாகப் பெற்றால் மாதத்திற்கு ரூ.9,476 EMI செலுத்த வேண்டும்

உங்கள் சிபில் ஸ்கோர் 750 க்கும் அதிகமாக இருந்தால் உங்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருக்கும்

சென்னையில் அதிகாரப்பூர்வ ஷோரூம்கள் சலுகைகளையும் வழங்குகின்றன. இதனால் ஆன்ரோடு விலை EMI சுமை குறைகிறது