Hyundai Creta EV vs Creta: ஹுண்டாய் கிரேட்டா vs கிரேட்டா மின்சார கார் - வித்தியாசம் என்ன?
Hyundai Creta EV vs Creta: ஹுண்டாய் கிரேட்டா இன்ஜின் எடிஷனுக்கும், மின்சார வாகன எடிஷனுக்கும் இடையெ, உள்ள வித்தியாசம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலா.
Hyundai Creta EV vs Creta: ஹுண்டாய் கிரேட்டா இன்ஜின் எடிஷனுக்கும், மின்சார வாகன எடிஷனுக்குமான வித்தியாசங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹுண்டாய் கிரேட்டா மின்சார கார்:
ஹூண்டாய் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த, கிரேட்டா மின்சார வாகனத்தை தயார் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, கிரேட்டா கார் மாடலின் ஃபேஸ்லிப்ட் எடிஷன் அடிப்படையில் தான், புதிய மின்சார எடிஷன் உருவாகி வருகிறது. இதில் மின்சார வாகனங்களுக்கான சில குறிப்பிட்ட அம்சங்களுடன், Creta ICE பதிப்பை விட சில அம்சங்களில் வேறுபட்டதாக இருக்கும்.
கிரேட்டா வடிவமைப்பு விவரம்:
கிரேட்டா மின்சார எடிஷனானது தற்போதைய ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட க்ரெட்டாவின் தோற்றத்தைப் பெறுகிறது. அதே வேளையில், EV காற்றியக்கவியலுக்கு உகந்ததாக்கப்பட்ட முன்பக்க பம்பர் வடிவமைப்புடன் வெற்று கிரில் மற்றும் வித்தியாசமான லைட்டிங் சிக்னேச்சரை கொண்டிருக்கும். இது 17 இன்ச் வீல்களையும் பெறும், அவை வரம்பை அதிகரிக்கும் மின்சார வாகனங்களுக்கு என தனிப்பயனாக்க டயர்களுடன் காற்றியக்கவியலுக்கு உகந்ததாக இருக்கும். சைட் ஃபுரொபைல் தற்போதைய கிரேட்டாவைப் போலவே இருக்கும், ஆனால் பின்புறம் நிச்சயமாக EV பேட்ஜுடன் சில மாற்றங்களைப் பெறலாம்.
பேட்டரி விவரங்கள்:
உட்புறம் மின்சார வாகனங்களுக்கான சில குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் EV தொடர்பான தகவல்களுடன் ஒரு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறலாம். கிரேட்டா EV ஆனது 45kWh பேட்டரி பேக்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 450- முதல் 500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என கருதப்படுகிறது. பயனாளர்களால் எதிர்பார்க்கக்கூடிய மற்ற அம்சங்களின் பட்டியலில் ஸ்டீயரிங் பேடல்ஸ் வழியாக மாற்றியமைக்கப்படும் ரிஜெனரேடிவ் பிரேக்கிங், பனோரமிக் சன்ரூஃப், கூல்டு இருக்கைகள், இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு உள்ளிட்டவையும் அடங்கும்.
எப்போது அறிமுகம்?
கிரேட்டா EV அல்லது எலக்ட்ரிக் கார்கள் இரண்டு சார்ஜர் ஆப்ஷன்களுடன், இரண்டு பேட்டரி பேக்குகளை வழங்கலாம். Creta EV ஆனது Tata Curvv EV மற்றும் Maruti Suzuki eVX போன்றவற்றுடன் போட்டியிடும். கிரேட்டா EV தற்போதுள்ள அதே ஹூண்டாய் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் சில்லறை விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சந்தைப்படுத்த தயார் நிலையில் உள்ள கிரேட்டா என்-லைன் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், புதிய கிரேட்டா மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.