Honda Amaze: ரூ.1.20 லட்சம் வரை விலையை குறைத்த Honda Amaze - எந்த வேரியண்டிற்கு இனி எவ்வளவு?
ஹோண்டா நிறுவனத்தின் Honda Amaze காரின் எந்த வேரியண்ட் எந்தளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? அதன் புதிய விலை என்ன? என்பதை கீழே காணலாம்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நாடு முழுவதும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு குறைந்துள்ளது. இந்த நிலையில், மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஹோண்டா நிறுவனத்தின் கார்களின் விலை எந்தளவு குறைந்துள்ளது? என்பதை காணலாம்.
ஹோண்டா நிறுவனத்தின் Honda Amaze காரில் எந்த வேரியண்ட் எந்தளவு குறைந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. S MT (old gen):
ஹோண்டாவின் ஹோண்டா அமேஸ் காரில் S MT (old gen) வேரியண்டின் பழைய விலை ரூபாய் 7 லட்சத்து 62 ஆயிரத்து 800 ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 6 லட்சத்து 97 ஆயிரத்து 700 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 65 ஆயிரத்து 100 ஆகும்.
2. S CVT (old gen):
ஹோண்டா அமேஸின் S CVT (old gen) புதிய விலை ரூபாய் 7 லட்சத்து 79 ஆயிரத்து 800 ஆகும். இந்த காரின் பழைய விலை ரூபாய் 8 லட்சத்து 52 ஆயிரத்து 600 ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 72 ஆயிரத்து 800 வரை விலை குறைந்துள்ளது.
3. V MT:
ஹோண்டா அமேஸின் V MT காரின் பழைய விலை ரூபாய் 8 லட்சத்து 9 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரத்து 800 ஆகும். இந்த கார் ரூபாய் 69 ஆயிரத்து 100 ஆகும்.
4. V CVT:
ஹோண்டா அமேஸ் காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 34 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் விலை ரூபாய் 79 ஆயிரத்து 800 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புதிய விலை ரூபாய் 8 லட்சத்து 55 ஆயிரத்து 100-க்கு தற்போது விற்கப்படுகிறது.
5. VX MT:
ஹோண்டா அமேஸின் VX MT வேரியண்டின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 19 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூபாய் 78 ஆயிரத்து 500 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூபாய் 8 லட்சத்து 41 ஆயிரத்து 400க்கு விற்கப்படுகிறது.
6. VX CVT:
ஹோண்டா அமேஸின் VX CVT காரின் விலை ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 ஆக இருந்தது. இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 85 ஆயிரத்து 300 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் புதிய விலை ரூபாய் 9 லட்சத்து 14 ஆயிரத்து 600 ஆக விற்கப்படுகிறது.
7. ZX MT:
ஹோண்டா அமேஸின் ZX MT காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த காரின் விலையும் ரூபாய் 85 ஆயிரத்து 300 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் புதிய விலை ரூபாய் 9 லட்சத்து 14 ஆயிரத்து 600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8. ZX CVT:
ஹோண்டா அமேஸின் ZX CVT காரின் பழைய விலை ரூபாய் 11 லட்சத்து 19 ஆயிரத்து 900 ஆகும். ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இந்த கார் ரூபாய் 1.20 லட்சம் வரை குறைக்கப்பட்டு்ளளது. இந்த காரின-் புதிய விலை ரூபாய் 9 லட்சத்து 99 லட்சத்து 900 ஆகும்.
சந்தையில் நன்றாக விற்பனையாகும் கார்களில் Honda Amaze மிக முக்கியமான கார் ஆகும். இந்த காரில் 1.2லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 18.65 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த காரில் ஆட்டோமெட்டிக் வெர்சன் 19.46 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
6 ஏர்பேக் வசதிகள் இந்த காரில் உள்ளது. சாம்பல், சிவப்பு, வெள்ளை, பழுப்பு, நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த கார் உள்ளது. இதில் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது.





















