Hero Xtreme 160R: முற்றிலும் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R மோட்டார்சைக்கிள்.. 4 வால்வ் இன்ஜின் உடன் அறிமுகம்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் வாகனங்களை விற்பதன் மூலம், வாடிக்கையாளர்களிடையே ஹீரோ மோட்டோகர்ப் நிறுவனம் நன்கு அறிமுகமாகியுள்ளது. பைக்குகளுக்கான இந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், தனது விரிபடுத்தும் நோக்கில் அடுத்தடுத்து புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் கூட, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. அதைதொடர்ந்து தற்போது மேலும் ஒரு புதிய மாடல் மோட்டர்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான டீசர்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
ஹீரோ எக்ஸ்டிரீம் 160R:
அதன்படி, புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடல் இந்தியாவில் வரும் ஜூன் 14 ஆம் தேதி அறிமும் செய்யப்பட இருக்கிறது. அதை முன்னிட்டு, தற்போது வெளியாகி இருக்கும் டீசர் வீடியோவில் புதிய எக்ஸ்ட்ரீம் 160R மாடல் பைக்கின் முக்கிய அப்டேட்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. டீசர் வீடியோவின் படி புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் வாகனத்தின் பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் மற்றும் அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட இன்ஜின் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
பிரேக்கிங்கிற்கு புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் பெட்டல் டைப் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய எக்ஸ்டிரீம் 160R மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் பஜாஜ் பல்சர் NS160 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. மெயின் ஃப்ரேம் சில மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பதால், பைக்கின் எடை உயர வாய்ப்புள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் யமஹா எஃப்இசட்எஸ்-எஃப்ஐ போன்ற போட்டியாளர்களைக் கருத்தில் கொண்டு இதில் புளூடூத் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்:
முன்னதாக எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T மாடல்களின் இன்ஜின்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வால்வு செட்டப்-ஐ மாற்றி இருந்தது. இதேபோன்ற அப்டேட் 160R 4V மாடலிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் 163சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 15 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
விலை விவரங்கள்:
தற்போது, விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடல் ரூ.1.18 லட்சம் முதல் 1.30 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வரும் மாதங்களில் புதிய எக்ஸ்ட்ரீம் 160R அறிமுகப்படுத்தப்பட்டவுடன் சுமார் ரூ.8,000-10,000 வரை விலை உயரும் என கூறப்படுகிறது.