Tata Nexon vs Hyundai Creta... ஜிஎஸ்டி வரி குறைந்தால்.. எந்த கார் கம்மி விலையில் கிடைக்கும்?
GST Rate Cut on Cars: 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV வாகனங்கள் இந்த GST குறைப்பால் அதிக பயனடையும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது..

2025 தீபாவளிக்கு முன்பு மத்திய அரசு சிறிய கார்கள் மீதான ஜிஎஸ்டியை 28% லிருந்து 18% ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் சிறிய கார்களை வாங்குவது மிகப்பெரிய நன்மையாக இருக்கும். இந்தியாவில் கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் ஒரே மாதிரியாக இல்லை. இது காரின் நீளம், எஞ்சின் திறன் மற்றும் எரிபொருள் வகையைப் பொறுத்தது.
வெவ்வேறு வகை ஜிஎஸ்டி வரிகள்:
இதுபோன்ற சூழ்நிலையில், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV வாகனங்கள் இந்த GST குறைப்பால் அதிக பயனடையும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.. இருப்பினும், பெரிய கார்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. டாடா நெக்ஸான் போன்ற 4 மீட்டருக்கும் குறைவான SUV கார்களுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் குறைப்பு இருக்கும். மறுபுறம், ஹூண்டாய் க்ரெட்டா 4 மீட்டருக்கும் அதிகமானது, எனவே இந்த வாகனத்தில் சற்று குறைவான நன்மை இருக்கும். க்ரெட்டாவின் விலை 55 ஆயிரத்து 585 ரூபாய் குறைக்கப்படும். ஏனென்றால் பெரிய SUVகள் 40 சதவீத உயர் GST அடுக்குக்குள் செல்லலாம்.
டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸானில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஹெச்பி ஆற்றலுடன் 170 என்எம் உச்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாறுபாடு 260 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது, அதிகபட்சமாக 110 பிஹெச்பி ஆற்றலை நெக்ஸான் வழங்குகிறது.
ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா மூன்று வெவ்வேறு எஞ்சின் விருப்பங்களுடன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முதலாவது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகும், இது 160 PS ஆற்றலையும் 253 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இரண்டாவது விருப்பம் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் ஆகும், இது 115 PS ஆற்றலையும் 144 Nm டார்க்கையும் தருகிறது. மூன்றாவது எஞ்சின் 1.5 லிட்டர் டர்போ டீசல் யூனிட் ஆகும், இது 114 bhp ஆற்றலையும் 250 Nm டார்க்கையும் உருவாக்குகிறது.
தற்போதைய காலத்தில் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது?
4 மீட்டருக்கும் குறைவான நீளம் மற்றும் 1.2 லிட்டர் வரை எஞ்சின் கொள்ளளவு கொண்ட சிறிய பெட்ரோல் கார்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் 1% செஸ் வரி விதிக்கப்படுகிறது. மறுபுறம், 4 மீட்டருக்கு மேல் நீளம் அல்லது 1.5 லிட்டருக்கு மேல் எஞ்சின் கொள்ளளவு கொண்ட பெரிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் 3% முதல் 15% செஸ் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவற்றின் மீதான மொத்த வரி 31% முதல் 43% வரை இருக்கலாம்.
அப்படி பார்க்கும் போது 4 மீட்டருக்கும் குறைவான காரான டாடா நெக்ஸான் மலிவான கிடைக்கும் காராக இருக்கலாம்






















