Diwali Car Discount: தீபாவளிக்கு கார் வாங்க ப்ளானா? மிட் சைஸ் எஸ்யுவிகளுக்கு ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி - மாடல் லிஸ்ட்
Diwali 2025 Car Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் மீது ரூ.2.5 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Diwali 2025 Car Discount: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்கோடா குஷக் மாடலுக்கு மீது ரூ.2.5 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிட்-சைஸ் எஸ்யுவிக்களுக்கு தீபாவளி ஆஃபர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் வாங்க விரும்புவோரின் கவனத்தை ஈர்க்க, பல முன்னணி நிறுவனங்கள் அதிரடியாக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் ஹுண்டாய், கியா, மஹிந்த்ரா மற்றும் டாடா போன்ற முன்னணி ப்ராண்ட்கள், தங்களது மிட்-சைஸ் எஸ்யுவிக்களுக்கு அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அக்டோபர் மாத இறுதி வரை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
1. மஹிந்த்ரா XUV 400 - ரூ.2.5 லட்சம் சேமிப்பு
தீவிரமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட XUV 300 கார் மாடலின் ப்ளாட்ஃபார்மில், மஹிந்த்ராவின் மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆன XUV 400 ரூ.15.49 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த காரின் மீது ரூ.2.5 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்தையில் EC Pro மற்றும் EL pro என வேரியண்ட்களில் XUV 400 விற்பனை செய்யப்படுகிறது. வேரியண்ட் அடிப்படையில் இந்த காருக்கு கார்ப்ரேட் டிஸ்கவுண்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச், ஸ்க்ராப்பேஜ் பலன்கள், பண மற்றும் அக்செசரி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 34.5 KWh மற்றும் 39.4 KWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ள மஹிந்த்ராவின் XUV 400, 375 மற்றும் 456 கிலோ மீட்டர் ரேஞ்சை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஸ்கோடா குஷக் - ரூ.2.5 லட்சம் சேமிப்பு
ஸ்கோடா குஷக் கார் மாடலை வாங்க விரும்புவோரும், இந்த தீபாவளியில் ரூ.2.5 லட்சம் வரையிலான குறைந்த விலையில் அந்த காரை சொந்தமாக்கலாம். கூடுதலாக ஓராண்டிற்கான சூப்பர் கேர் சர்வீஸ் பேக்கேஜையும் நிறுவனம் வழங்குகிறது. ரூ.10.61 லட்சம் என்ற தொடக்க விலையில் கிடைக்கும் இந்த காரானது, மொத்தம் 8 ட்ரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் இந்த காரானது 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 1.0-லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினிற்கு 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. அதேநேரம் 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்ட குஷக் வேரியண்டானது 7-ஸ்பீட் DCT உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
3. ஃபோக்ஸ்வாகன் டைகுன் - ரூ.1.8 லட்சம் சேமிப்பு:
ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் டைகுன் கார் மாடலின் மீது, தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.8 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சலுகையானது GT Plus ஸ்போர்ட் வேரியண்டிற்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஸ்க்ரேப்பேஜ் போனஸாக ரூ.20 ஆயிரமும், கூடுதல் டிஸ்கவுண்டாக ரூ.1.60 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவியின் ஜிடி லைன் வேரியண்டிற்கு ரூ.80,000 வரை பலன்களை பெ முடியும்.
டைகன் ஜிடி பிளஸ் குரோம் வேரியண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், டாப்லைன் குரோம் வேரியண்டிற்கு ரூ.1.35 லட்சம் வரையிலு, டைகன் ஹைலைன் பிளஸ் குரோம் வேரியண்டிற்கு ரூ.1 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்புள்ள ஸ்க்ராப்பேஜ் சலுகைகளும் உள்ளன. டைகன் காரின் தொடக்க விலை ரூ.10.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மெக்கானிக்கல் ரீதியாக, வோக்ஸ்வாகன் டைகன் ஸ்கோடா குஷக்கை பிரதிபலிக்கிறது.
4. சுசூகி க்ராண்ட் விட்டாரா - ரூ.1.8 லட்சம் சேமிப்பு
மாருதி சுசூகி கிராண்ட் விட்டாராவின் வலுவான ஹைப்ரிட் வகைகளுக்கு ரூ.1.8 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வகைகளுக்கு மட்டும் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் சிஎன்ஜி வகைகளின் வாடிக்கையாளர்கள் ரூ.40,000 வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவின் விலை ரூ.10.76 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது, இதில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, 5-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது. வலுவான ஹைப்ரிட் வகைகளும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.
5. ஹோண்டா எலிவேட் - ரூ.1.51 லட்சம் சேமிப்பு
ஹோண்டாவின் எலிவேட் கார் மாடலானது ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடியைப் பெறுகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் விலை விலை ரூ.11 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. ஐந்து வகைகளில் பரவியுள்ள ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 121hp மற்றும் 145Nm டார்க்கை உருவாக்குகிறது. நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆனது CVT ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
6. கியா செல்டோஸ் - ரூ.1.47 லட்சம் சேமிப்பு
கியா ப்ராண்டின் செல்டோஸ் காரை அக்டோபர் மாதத்தில் வாங்குபவர்கள் ரூ.1.47 லட்சம் வரை சேமிக்கலாம். இதன் விலை ரூ.10.79 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. ஒன்பது டிரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆனது 160hp மற்றும் 253Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதில் 6-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் IMT, 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக், 7-ஸ்பீட் DCT மற்றும் IVT (கியா ஒரு CVT ஐக் குறிக்கிறது) ஆகிய ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.





















