Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்.. Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Citroen C3 காரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா, டொயோட்டோ போன்ற பல நிறுவனங்கள் இருந்தாலும் சிட்ரோன் நிறுவனத்திற்கும் என்று தனி வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. சிட்ரோன் நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் உள்ள Citroen C3 காரின் தரம், விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
Citroen c3 காரின் விலை:
Citroen C3 கார் ப்ரெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 5.76 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 11.13 லட்சம் ஆகும். இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த கார் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் ஓடும் திறன் கொண்டது.
இந்த காரில் 1198 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 80 பிஎச்பி திறன் கொண்டது. இந்த கார் 19.3 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த காரில் மொத்தம் 15 வேரியண்ட்கள் உள்ளது.
வேரியண்டும், விலையும்:
1. C3 Live 1.2 Petrol - ரூ.5.76 லட்சம்
2. C3 Live 1.2 CNG - ரூ.6.69 லட்சம்
3. C3 Feel 1.2 Petrol - ரூ.6.87 லட்சம்
4. C3 Feel 1.2 CNG ரூ.7.80 லட்சம்
5. C3 Feel (O) 1.2 Petrol - ரூ.7.98 லட்சம்
6. C3 X Shine 1.2 Petrol - ரூ.8.66 லட்சம்
7.C3 X Shine 1.2 Petrol Dual Tone - ரூ.8.82 லட்சம்
8. C3 Feel (O) 1.2 CNG - ரூ.8.91 லட்சம்
9. C3 X Shine 1.2 Petrol Dark Edition - ரூ.9.17 லட்சம்
10. C3 X Shine 1.2 CNG - ரூ.9.59 லட்சம்
11. C3 X Shine 1.2 CNG Dual Tone - ரூ.9.75 லட்சம்
12. C3 X Shine 1.2 Turbo - ரூ.9.97 லட்சம்
13. C3 X Shine 1.2 Turbo Dark Edition - ரூ.10.48 லட்சம்
14. C3 X Shine 1.2 Turbo AT Petrol - ரூ.10.82 லட்சம்
15. C3 X Shine 1.2 Turbo AT Petrol Dark Edition - ரூ.11.13 லட்சம்
சிறப்பம்சங்கள்:
ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு கார் விலை ரூபாய் 84 ஆயிரம் குறைந்துள்ளது. 115 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்களை கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் காராக இது உள்ளது. இந்த காரின் உட்கட்டமைப்பில் 10.25 டிஸ்ப்ளே உள்ளது. 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஒலி அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. வயர்லஸ் சார்ஜர் வசதியும் உள்ளது.
இந்த காரில் பயணிகள் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குள் பொருத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் இபிடி வசதியுடன் உள்து. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. அதிக வேகம் அலர்ட் வசதி உள்ளது. ஹில் ஹோல்ட் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது.
இந்த கார் சந்தையில் நிசான் மெக்னைட், டாடா டியாகோ, டாடா ஆல்ட்ராஸ், ரெனால்ட் கிகர் ஆகியவற்றிற்கு போட்டியாக உள்ளது. இந்த citroen c3 எஸ்யூவி தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹேட்ச்பேக் கார் ஆகும். 180 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.






















