மேலும் அறிய

Best Mileage Bikes: ரூ.1 லட்சத்தில் பைக் வாங்க திட்டமா? சிறந்த மைலேஜ் தரும் வாகனங்களின் லிஸ்ட் இதோ!

Best Mileage Bikes Under 1 Lakh: இந்தியாவில் ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த மைலேஜ் தரும், இருசக்கர வாகனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Best Mileage Bikes Under 1 Lakh: இந்தியாவில் ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் சிறந்த மைலேஜை தருகின்றன.

மைலேஜ் தரும் இருசக்கர வாகனங்கள்:

வாகனங்கள் என்பது மக்களின் தவிர்க்க முடியாத அடிப்படை தேவையாக உருவெடுத்துள்ளது. அதிலும் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது பெரும்பான்மையினராக உள்ள நடுத்தர வர்கத்தினரிடையே உச்சபட்சமாக உள்ளது. ஆடம்பரமானாலும் அத்தியாவசியமாக உள்ள இருசக்கர வாகனங்களில், பயனாளர்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பு என்பது மைலேஜ் தான். இந்நிலையில்,  ஒரு லட்ச ரூபாய் செலவில் இருசக்கர வாகனம் வாங்க விரும்புவோருக்கு உதவிகரமாக, அந்த பட்ஜெட்டில் சிறந்த மைலேஜ் வழங்கும் வாகனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

HERO SPLENDOR PLUS:

ஹீரோ ஸ்ப்லெண்டர் பிளஸ் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமானதிலிருந்தே, நாட்டின் ஆட்டோமொபைல் சந்தையில் அசைக்க முடியாத வலுவான இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதற்கு போட்டியாக அடுத்தடுத்து பல்வேறு மாடல் வாகனங்கள் அறிமுகமானாலும், ஹீரோ ஸ்ப்லெண்டர் பிளஸ் மாடலுக்கான இடம் இன்றளவும் வலுவாக உள்ளது. இன்றுவரை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக உள்ளது. 97.2 சிசி ஆர்-கூல்ட்  சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 7.912bhp  மற்றும் 8.05Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அதிகபட்ச விலை - ரூ. 80,511

BAJAJ PLATINA 100:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிகவும் எரிபொருள் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பிரிவில் மற்றொரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன், பிளாட்டினா 100 மாடலானது 7.79 பிஎச்பி பீக் பவர் மற்றும் 8.30 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் 102 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.  இது குறைந்தபட்சம் 70 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை - ரூ. 80,525

TVS RADEON:

டிவிஎஸ் அதன் உயர் செயல்திறன் கொண்ட அப்பாச்சி ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இருப்பினும் உள்நாட்டு இரு சக்கர வாகன பிராண்ட் ரேடியான் போன்ற மாடல்களுடன், கம்யூட்டர் மோட்டார் சைக்கிள் பிரிவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இது 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் மூலம் 8 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 70 கிலோ மிட்டர் மைலேஜை வழங்கும் என கூறப்படுகிறது. அதிகபட்ச விலை ரூ- 76,291

HONDA SHINE 125:

100-110 சிசி கம்யூட்டர் மோட்டார் சைக்கிள்களில் ஹோண்டா ஷைன் 125 பிரீமியம் தயாரிப்பாக இடம்பெறுகிறது.  10.59 பிஎச்பி பவர் மற்றும் 11 என்.எம். டார்க் உற்பத்தி செய்யும் 123.9 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள் சுமார் 65 கிலோ மிட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை - ரூ. 66,900

TVS Sport:

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட் மாடல் இருசக்கர வாகனம் லிட்டருக்கு, 70 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது பிராண்டின் மிகவும் எரிபொருள் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஒன்றாகும். இது 7350 ஆர்பிஎம்மில் 8.29 பிஎச்பி பவரையும், 4500 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க்கையும் வழங்கும் 109 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இன்ஜின் 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை - ரூ. 72,548

Bajaj CT110: 

பஜாஜ் CT110 ஆனது அதன் உயர் எரிபொருள் திறன் காரணமாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மோட்டார் சைக்கிளாக உள்ளது. 8.48 பிஎச்பி மற்றும் 9.81 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும் 115 சிசி இன்ஜினிலிருந்து, இந்த பைக் லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அதிகபட்ச விலை - ரூ.70,170 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget