Best Cruiser Bikes: க்ரூசர் பைக் வாங்க ஆசையா? ரூ.2 லட்சம் பட்ஜெட்டில் உங்களுக்கான லிஸ்ட் இதோ..!
Best Cruiser Bikes in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ரூ.2 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் க்ரூசர் மோட்டார்சைக்கிள்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Best Cruiser Bikes in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ரூ.2 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 க்ரூசர் மோட்டார்சைக்கிள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
க்ரூசர் மோட்டார்சைக்கிள்:
மோட்டார்சைக்கிள்கள் என்பது ஒரு வாகனம் என்பதையும் தாண்டி, மனித வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. அடிப்படை தேவை என்பது போன்ற பல அம்சங்களின் அடிப்படையில், பட்ஜெட், லாங் ரைட் மற்றும் ஸ்போர்ட்டியர் என பல வகையிலான மோட்டார்சைக்கிள்கள் கிடைக்கின்றன. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மாடல் தான் க்ரூசர். இது சிறந்த வசதியை உறுதி செய்யும் மோட்டார் சைக்கிள்களாகும். அதே நேரத்தில் சிறந்த செயல்திறனையும் வழங்குகிறது . இவை ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இருந்து வேறுபட்டு இருக்கை உயரம் குறைவாக இருக்கும். சவாரி செய்யும் நிலையும் இயற்கையாகவே மிகவும் தளர்வானதாக இருக்கும். நீண்ட தூரம் மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கும் க்ரூசர் சாதகமானதாக இருக்கும். அந்த வகையில், இந்திய சந்தையில் 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், டாப் 5 க்ரூசர் மோட்டார்சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
5.Bajaj Avenger Cruise 220:
தொலைதூர பயண என வரும்போது, பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 என்பது அமைதியான, நிதானமான சூழலை விரும்பும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு க்ரூஸர் பைக் ஆகும். குறைந்த-ஸ்லங் டிசைன், அகலமான ஹேண்டில்பார்கள் மற்றும் வசதியான ரைடிங் பொசிஷனுடன் கிளாசிக் க்ரூஸர் ஸ்டைலிங்கைக் கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 220சிசி, டிடிஎஸ்-ஐ, ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் ஆனது, 19 பிஎச்பி மற்றும் 17.5 என்எம் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது நெடுஞ்சாலை பயணத்திற்கு போதுமான செயல்திறனை வழங்குகிறது. பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 மாடலின் தொடக்க விலை தோராயமாக ரூ.1,31,826 ஆகும்.
4. TVS Ronin 225:
TVS மோட்டார் நிறுவனம், கடந்த ஆண்டு ரோனின் 225 மாடலின் சிறப்பு பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ஒரு லட்சத்து 49 ஆயிரம் தொடங்கி, அதிகபட்சமாக ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 225சிசி இன்ஜின் ஆனது 20.1 பிஎச்பி மற்றும் 19.932NM ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
3. Royal Enfield Bullet 350:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பாரம்பரியமிக்க மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட மாடல், கடந்த ஆண்டு அறிமுகமானது. இதன் விலை ஒரு லட்சத்து 74 ஆயிரம் தொடங்கி, 2 லட்சத்து 16 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 349 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆனது 20.2பிஎச்பி மற்றும் 27NM ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
2. Royal Enfield Classic 350:
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 மாடலின் விலை இந்திய சந்தையில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் தொடங்கி, 2 லட்சத்து 25 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11 வண்ணங்களில் விருப்பம் செய்யப்படுகிறது. இதில் இடம்பெற்றுள 349 சிசி இன்ஜின் ஆனது, 20.1 பிஎச்பி மற்றும் 27NM ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
1. JAWA 42:
ஜாவா 42 பைக் மாடலின் விலை இந்திய சந்தையில், ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் தொடங்கி ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 294.72 சிசி இன்ஜின் ஆனது , 26.95 பிஎச்பி மற்றும் 26.84NM ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.