Budget Cars: 8 லட்சம் தான் உங்க பட்ஜெட்டா? மாருதி ஸ்விஃப்ட் முதல் டாடா பஞ்ச் வரை.. பெஸ்ட் பட்ஜெட் கார் ஆப்சன்ஸ் இது தான்
உங்களிடம் ரூ.8 லட்சம் தான் பட்ஜெட்டா மற்றும் உங்கள் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் 5 கார்களின் பட்டியலை குறித்து காண்போம்
நகரப் போக்குவரத்து, நெரிசல் மிகுந்த சாலைகள், குறுகிய இடங்கள் மற்றும் சுலபமான பார்கிங்கிற்காக ஒரு சிறிய, வசதியான மற்றும் கம்மி விலையில் கார் வேணுமா மேலும், உங்களிடம் ரூ.8 லட்சம் தான் பட்ஜெட்டா மற்றும் உங்கள் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் 5 கார்களின் பட்டியலை குறித்து காண்போம்
1. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் -
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கான நம்பகமான சிட்டில் ஓட்டும் ஹேட்ச்பேக் காராக இருந்து வருகிறது. புதிய வடிவமைப்பில் வயர்லெஸ் சார்ஜர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், ABS, EBD, இழுவைக் கட்டுப்பாடு போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளது. இது 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை: ரூ.7.38 லட்சம்(நகரத்துக்கு மாறுப்படும்)
2. டாடா பஞ்ச்
எஸ்யூவி லூக் மற்றும் சிறந்த பாதுகாப்பு
ஆகியவற்றை விரும்புவோருக்கான சிறந்த தேர்வாகும் டாடா பஞ்ச் ஆகும். 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளது. சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், அரை-டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற வசதிகள் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது.இதன் ஆரம்ப விலை: ரூ.7.13 லட்சமாக உள்ளது
3. சிட்ரோயன் C3
பிரெஞ்சு ஸ்டைல், பெரிய உட்புறம் மற்றும் சக்திவாய்ந்த டர்போ பவருடன் சிட்ரோயன் C3 கிடைக்கிறது. 10.25 இன்ச் டச் ஸ்கீரின், டிஜிட்டல் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. ஆனால், சில அடிப்படை வசதிகள் இல்லை, நெட்வொர்க் சேவை குறைவாக உள்ளது. இது 1.2 லிட்டர் NA மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு வகைகளில் வருகிறது. இதன் ஆரம்ப விலை: ரூ.7.12 லட்சம் ஆகும்
4. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
குறைந்த விலையில் பிரீமியம் அம்சங்களை தரும் ஹேட்ச்பேக் கார் ஆன ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ். இதில் வயர்லெஸ் சார்ஜர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, குரூஸ் கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ள இதன் ஆரம்ப விலை: ரூ.6.88 லட்சம்.
5. மாருதி சுசுகி பலேனோ -
அதிக இடம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பல வசதிகளை விரும்புபவர்களுக்கு மாருதி சுசுகி பலேனோ சிறந்த தேர்வாக இருக்கும். ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, அட்டோமேடிக் காலநிலை கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்தியா NCAP 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதன் ஆரம்ப விலை: ரூ.7.69 லட்சம்.
இந்த அனைத்து விருப்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஸ்விஃப்ட் ஒரு சிறந்த தேர்வாகும், இது பாதுகாப்பு மற்றும் ஸ்டைலின் நல்ல கலவையை வழங்குகிறது, டாடா பஞ்ச் எஸ்யூவி தோற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு சிறந்தது, சிட்ரோயன் சி3 டர்போ செயல்திறன் மற்றும் ஸ்டைலின் அடிப்படையில் தனித்து நிற்கிறது, கிராண்ட் ஐ10 நியோஸ் பிரீமியம் உணர்வைத் தருகிறது மற்றும் அதிக இடம் மற்றும் மேம்பட்ட அம்சங்களைத் தேடுபவர்களுக்கு பலேனோ சரியானது.






















