New Baleno: அதிரடிக்காரன் பி.ஜி.எம்மே போடலாம் போலயே.. அட்டகாசமான வசதிகளுடன் சந்தைக்கு வரவிருக்கும் பலேனோ கார் !
புதிய வகை பலேனோ கார் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் முன்னணி கார் விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனத்தின் புதிய வகை பாலினோ கார் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த காரில் சில மாற்றங்களை செய்து மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்நிலையில் அந்த காரிலுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
புதிய பலேனோ காரின் வெளிபுறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தில் ஹெட் லைட் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி லைட் டிஆர்.எல் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 16 இன்ச் டைமெண்ட் அலாய் வீல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் க்ரோம் கோட்டிங்கும் தரப்பட்டுள்ளது.
பழைய பலேனோவில் இல்லாத சில அம்சங்கள் இந்த புதிய பலேனோ வகையில் இருக்கிறது. அதாவது டச் ஸ்கீரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி வியூ கேமரா, ரியர் ஏசி வெண்ட், பவர் கண்ணாடி, 6 ஏர் பேக், வையர்லெஸ் சார்ஜிங் வசதி ஆகியவை உள்ளன. இந்த காரில் சன் ரூஃப் இடம்பெறவில்லை. இவை தவிர கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரியர் வியூ சென்சார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க:கியா கேரன்ஸ் கார் மாடலை ஏன் வாங்க வேண்டும்? டாப் 5 காரணங்கள் இதோ...
இந்தப் புதிய பலேனோவில் எரிவாயுவை மிச்சப்படுத்தும் வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் உள்ள கார்களுக்கு மத்தியில் இது ஒரு சிக்கனமான காராக அமைந்துள்ளது. தற்போது உள்ள பலேனோ கார்களின் விலை 6 லட்சம் முதல் 9.5 லட்சம் வரை உள்ளது. இந்தப் புதிய வகை பலேனோவின் விலை ஒவ்வொரு வகையிலும் அந்த விலையிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்தக் காரின் விலை வெளியாகும் போது முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: இனி குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. புது விதிமுறைகள் அமல்..