Ather Electric Scooter: கூடுதல் அம்சங்கள், புதிய நிறங்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
ஏத்தர் நிறுவனம் பல்வேறு கூடுதல் அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணங்களில், புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு மத்தியில், கடந்த 2018ம் ஆண்டு ஏத்தர் நிறுவனம் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து, படிப்படியாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், அந்நிறுவனம் நிலையான வளர்ச்சியை பெற்று வருகிறது. அந்த வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் 51,192 மின்சார இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. இந்நிலையில் தான் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, அந்நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கம்யூனிட்டி டே:
அந்நிறுவனம் கடந்த முறையை விட இந்த ஆண்டு எந்த அளவுக்கு விசேஷமாக மாறி இருக்கிறது என்பதை விளக்கும் விதமாக, ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் கம்யுனிட்டி டே பெங்களூருவில் நடைபெற்றது. வாடிக்கையாளர்கள் கலந்தும் கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த நிகழ்வில், கடந்த ஆண்டு ஆறாயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில் நடப்பாண்டில் 80 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
And of course, the new colours 🌈
— Ather Energy (@atherenergy) January 7, 2023
It's okay to rest on your laurels (for a bit)#AtherCommunityDay#NewYearNewWheee
(7/7) pic.twitter.com/1eWk0vW4Qh
புதுப்புது அம்சங்கள்:
நிகழ்ச்சியில், ஏத்தர்ஸ் டேக் 5.0 பெயரில் மென்பொருள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு புது யூசர் இண்டர்ஃபேஸ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புது யூசர் இண்டர்ஃபேஸ் சிறப்பான ஸ்வைப் மற்றும் டச் ரெகக்னைஷன் கொண்டுள்ளது. இது முன்பை விட அதிக சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதுதவிர ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற ஐகான்கள் மொபைல் போனில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. கூகுள் மேப்ஸ் சேவை கொண்ட உலகின் முதல் ஸ்கூட்டர் ஏத்தர் 450X. தற்போது வெக்டார் மேப் சேவை வழங்கப்படும் நிலையில், ஏத்தர் 450X மற்றும் 450 பிளஸ் பயனர்களுக்கு நேரலை போக்குவரத்து விவரங்கள் வழங்கப்படுகிறது. இது மொபைலில் உள்ள கூகுள் மேப்ஸ் போன்றே செயல்படும். இவைதவிர ஆட்டோஹோல்டு எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இது வழக்கமான ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கும் மெக்கானிக்கல் பிரேக் லாக் வசதியை வழங்கும். இந்த அம்சம் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.
புதிய சார்ஜர் கிரிட்கள்:
இதனிடையே, அடுத்தடுத்த மாதங்களில் குரூயிஸ் கண்ட்ரோல், கிரால் கண்ட்ரோல் மற்றும் மேம்பட்ட ரிஜென் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 900 ஃபாஸ்ட் சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை ஏத்தர் நிறுவனம் அமைத்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 1300 சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் 3.3 கிலோவாட் சர்வதேச ஏசி சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஏத்தர் 450X மாடல் ஸ்கூட்டரக்ள் இனி லூனார் கிரே மற்றும் ரெட் அக்செண்ட்கள், காஸ்மிக் பிளாக் மற்றும் அக்வா புளூ அக்செண்ட்கள், ட்ரூ ரெட் மற்றும் வைட் அக்செண்ட்கள், சால்ட் கிரீன் மற்றும் ஆர்ஞ்சு அக்செண்ட்கள் ஆகிய புது நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 பில்லியன் கி.மீ. இலக்கு:
முன்னதாக கார்களையும் சார்ஜ் செய்யும் வகையில் 450X மாடலுக்காக புது சீட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய சீட்-ஐ விட அதிக சவுகரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்யுனிட்டி டே நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் இந்த சீட் இலவசமாக மாற்றி வழங்கப்படுகிறது. இதுவரை ஏத்தர் வாகனங்கள் 500 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் ஒரு பில்லியன் கிலோமீட்டர்களை கடக்க முடியும் என ஏத்தர் எனர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளது.