Electric SUV: எல்லாமே 500+ KM ரேஞ்ச் - அடுத்தடுத்து அறிமுகமாகும் 4 மின்சார எஸ்யுவி, லாங் ரைடுக்கான அம்சங்கள்
New Electric SUV 500 KM Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 500கிமீ ரேஞ்சுடன் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 4 மின்சார எஸ்யுவிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

New Electric SUV 500 KM Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 4 மின்சார எஸ்யுவிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மிட்சைஸ் மின்சார எஸ்யுவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்சைஸ் எஸ்யுவி பிரிவு மிகுந்த தேவைமிக்கதாகவும் , போட்டித்தன்மை மிக்கதாகவும் உருவெடுத்துள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மிட்சைஸ் மின்சார எஸ்யுவி பிரிவில் விரைவில் சில கார் மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ளன. இதில் மாருதி சுசூகியின் இ-விட்டாரா, மஹிந்திராவின் XEV 7e மற்றும் மஹிந்திராவின் XUV700 ஆகிய கார்களுடன், டாடாவின் இரண்டு மின்சார கார்களும் அடங்கும். இந்த நான்கு கார் மாடல்களும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப, 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. எனவே அந்த கார் மாடல்களின் விலை, வெளியீடு மற்றும் ரேஞ்ச் தொடர்பான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. மாருதி சுசூகி இ-விட்டாரா
இந்திய சந்தையில் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஹிந்திரா, காலத்தின் சூழலுக்கு ஏற்ப மின்சார வாகனங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, XEV 9e மற்றும் BE 6 என்ற இரண்டு கார் மாடல்களை அறிமுகப்படுத்தி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மஹிந்திராவின் புதிய XEV 7e கார் மாடல் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. INGLO ஸ்கேட்போர்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இந்த காரின் ஸ்டைலிங்கில், XUV.e8 கான்செப்ட் மற்றும் XUV 700 கார் மாடலின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இதிலும் XEV 9e மற்றும் BE 6 கார்களில் இருப்பதை போன்று, 59 kWh மற்றும் 79 kWh இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் தொடரும். அதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் வழங்கும். வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்படாத நிலையில், XEV 7e கார் மாடல் விலை ரூ.21 முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. மாருதி சுசூகி: இ விட்டாரா
இந்திய கார் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் மாருதி நிறுவனம், வரும் செப்டம்பர் மாதத்தில் தனது முதல் மின்சார கார் மாடலான இ விட்டாராவை அறிமுகப்படுத்த உள்ளது. இது 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. 3 வேரியண்ட்களில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன் கொண்ட இந்த காரின் விலை, ரூ.17 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
3. டாடா ஹாரியர் EV
டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார் மாடலின் மின்சார எடிஷன் வரும் ஜுன் 3ம் தேதி இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. ஆல்-வீல் ட்ரைவ் அம்சத்தில் விற்பனைக்கு வரும் இந்த காரும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் அளிக்கும் பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.24 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 60-75 kWh திறன் கொண்ட பேட்டரி இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 500Nm இழுவை திறனை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
4. டாடா சியாரா EV
டாடா நிறுவனம் தனது புதிய மின்சார கார் மாடலான சியாராவை, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் சந்தைப்படுத்தப்பட உள்ள இந்த கார், பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என மூன்று எடிஷன்களிலும் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. ஹாரியரை போன்ற பேட்டரி பேக் ஆப்ஷன்களையே இந்த காரும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரட்டை மோட்டார்களுடன் ஆல்-வீல் ட்ரைவ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கலாம். இதன் விலை சுமார் 25 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.





















