Skoda Octavia RS: மொத்தமே 100 தான்.. ஆக்டேவியாவிற்கு நேரம் வந்தாச்சு - அறிமுகம், விலைக்கு தேதி குறித்த ஸ்கோடா
Skoda Octavia RS: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆக்டேவியா RS கார் மாடலுக்கான முன்பதிவு, வரும் அக்டோபர் 6ம் தேதி தொடங்கும் என ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

Skoda Octavia RS: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆக்டேவியா RS கார் மாடலுக்கான விலை விவரங்கள், வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா RS
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய செடான் மாடலான, ஆக்டேவியா RS வரும் அக்டோபர் 17ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு வரும் அக்டோபர் 6ம் தேதி தொடங்குமெனவும் அதிகாரப்பூர்வர்மாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்டேவியா RS மாடலின் வெறும் 100 யூனிட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த செயல்திறன் மிக்க ஸ்கோடா செடான் காரின் விலை சுமார் ரூ.50 முதல் 55 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்கோடா ஆக்டேவியா RS - இன்ஜின் விவரங்கள்
ஸ்கோடா ஆக்டேவியா RS மாடலின் விவரங்களை ஆராய்கையில், இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதற்கு 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த மோட்டாரானது 265bhp மற்றும் 370Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.4 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செடானில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன் மற்றும் ஃப்ரண்ட் ஆக்ஷிலில் எலெக்ட்ரானிகலி கண்ட்ரோல்ட் லிமிடெட்-ஸ்லிப் டிஃப்ரென்ஷியலும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சர்வதேச எடிஷனில் இடம்பெற்றுள்ள டைனமிக் சேஷிஸ் கண்ட்ரோல் அடாப்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை இந்தியாவிற்கான ஆக்டேவியா RS எடிஷன் தவறவிடக் கூடும். இந்த செடானானது, 340 X 30 மிமீ முன் மற்றும் 310 X 22 மிமீ பின்புற வெண்டிலேடட் டிஸ்க் பிரேக்குகளிலிருந்து பிரேக்கிங் சக்தியைப் பெறுகிறது.
Official Teaser pic.twitter.com/CAJO5B0h2Y
— Sunderdeep - Volklub (@volklub) September 25, 2025
ஸ்கோடா ஆக்டேவியா RS - ப்ரீமியம் கேபின் & அம்சங்கள்
ப்ரீமியம் கார் மாடலாக இருப்பதற்கு ஏற்ப ஆக்டேவியா RS மாடலில், பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக,
- 3 ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல்
- கார்பன் டெகோர் மற்றும் காண்ட்ராஸ்டிங் ரெட் தையலுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள்
- 13 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
- சேட்டிலைட் நேவிகேஷன்
- 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர்
- பனோரமிம் சன்ரூஃப்
- ஹீடட் ஃப்ரண்ட் & ரியர் சீட்ஸ்
- ஃபாள்ட் பாட்டம்ட் RS ஸ்டியரிங் வீல்
- அலுமினியம் பெடல்ஸ்
ஆக்டேவியா RS - ஸ்போர்ட்டி டிசைன்
புதிய ஆக்டேவியா RS கார் மாடலானது 600 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. அதனை பின்புற இருக்கைகளை மடிப்பதன் மூலம் ஆயிரத்து 555 லிட்டராகவும் உயர்த்த முடியும். தோற்ற அடிப்படையில் இது ஸ்போர்ட்டி மாடலாகவும் காட்சியளிக்கிறது. அதற்கேற்ப,
- ப்ளாக் டிடெயிலிங்கை கொண்ட நியூ க்ரில்
- LED மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் புதிய க்றிஸ்டிலினியம் எலிமெண்ட்ஸ்
- ஸ்போர்ட்டி - RS மாடலுக்கு என தனித்துவமான முன் மற்றும் பின்புற பம்பர்கள்
- அனிமேடட் இண்டிகேட்டர்களுடன் கூடிய புதிய LED ரியர் லைட்ஸ்
- மோஷன் ஆக்டிவேடட் டெயில்கேட்
- ஸ்போர்ட்டி எக்சாஸ்ட் சிஸ்டம்





















