அடிக்கடி கண் நோய்.. ஜோதிட ரீதியான விளக்கமும் அதன் தீர்வும்! எங்கு? என்ன செய்ய வேண்டும்?
கண்களை குறிக்கும் காரக கிரகங்கள் மூன்று அவை ஒளி கிரகங்களான சூரியன் ,சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும்
அன்பார்ந்த வாசகர்களே! கண் தொடர்பாக பல வகையான நோய்கள் இருக்கின்றன. ஆனால் அத்துனை நோய்களையும் கண் நோய் என்று குறிப்பிடுகின்றோம். ஒரு கிரகமே தான் நின்ற ராசியால் நின்ற நட்சத்திரத்தால் தன்னுடைய இணைந்த கிரகங்களால் தன்னைப் பார்த்த கிரகங்களால் பாகை முறையில் தொடர்பு கொண்ட கிரகங்களால் நோய்களின் தன்மைகளையும் வீரியத்தையும் அதிகப்படுத்தவோ அல்லது குறைக்கவும் செய்கிறது . இந்த நாள் பல்வேறு விதங்களில் கண் நோய் இருந்தாலும் முதலில் கண்ணில் நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்படும் என்று கூறுவது அவசியம் ஆகிறது .
பொதுவாக உடலில் ஊனம் ஏற்படுவதை அறிய ஒரு ஜாதகருடைய பிறப்புக் கால ஜாதகம் அவர்களின் தசா புத்தி அந்தரங்களை சரியாக கணக்கிட வேண்டும். அதேபோல் எந்த கிரகம் ராகு கேதுகளுக்கு மிக அருகாமையில் உள்ளது என்பதையும் கணக்கிட வேண்டும்.
கண் நோய்களை உண்டாக்கும் காரக கிரகங்கள் :
கண்களை குறிக்கும் காரக கிரகங்கள் மூன்று அவை ஒளி கிரகங்களான சூரியன் ,சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும் . ஒன்றாம் பாவம் 12-ஆம் பாவமும் இரண்டாம் பாவங்களும் அவற்றின் நிற்கும் கிரகங்களும் கண் நோய்க்கு காரணமாக அமையும் . அதேபோல் மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசிகளும் அவற்றில் நிற்கும் கிரகங்களும் தான் கண் நோய்களுக்கு பெரும்பாலான காரக கிரகங்களாக அமைகின்றது .
நவகிரகங்களும் கண்களும் :
வலது கண்ணின் பார்வைத் திறன் மற்றும் பலத்தை சூரியனை வைத்து அறியலாம் . இடது கண்ணின் பார்வை திறன் மற்றும் பலத்தை சந்திரனை வைத்து அறியலாம் . மற்றவர்களிடமிருந்து சற்றே மாறுபாடு கொண்ட கண்ணின் அமைப்பையும் கண்ணின் அழகையும் சுக்கிரனை வைத்து அறியலாம் . ஒருவருக்கு கிட்ட பார்வை உள்ளது அல்லது தூரப்பார்வை உள்ளது என்பதை சூரியனை வைத்து நாம் புரிந்துகொள்ளலாம் . அதேபோல் கண்ணில் இருக்கும் நீர் தன்மையையும் கண்ணில் ஏற்படும் உயர் அழுத்தம் போன்றவையும் செவ்வாயை வைத்து அறியலாம் .
கண் நோய் ஏற்பட காரணமான கிரக பாவ அமைப்புகள் :
- மேஷம் ரிஷபம் மீன ராசிகளுக்கு செவ்வாய் சனியின் தொடர்பு ஏற்படும் போது அவர்கள் கண் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் .
- இரண்டாம் இடத்திற்கு செவ்வாய் சனியின் பார்வை இருப்பது கண் நோயை உண்டாக்கலாம் .
- பனிரெண்டாம் இடத்தில் சனி இருப்பது இரண்டாம் இடத்திற்கு செவ்வாய் தொடர்புபெறுவது கண் நோய் உண்டாக்கலாம் .
- அதேபோல் சுக்கிரன் அஸ்தங்கம் அடைவதையும் கண் பார்வை கோளாறு குறிக்கும் .
- ஒருவர் ஜாதகத்தில் நீர் ராசி இரண்டாம் வீடாகி அதில் பலமான பாவ கிரகங்கள் இருந்தால் கண் சம்பந்தமான நோய்கள் பரவுகிறது.
இப்படி மேலே சொன்ன ஒன்று அல்லது பல கிரகங்கள் ஒன்று கூடி ஒன்று இரண்டு 12 ஆம் பாவங்களில் அமர்ந்திருக்குமாயின் அவர்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.
கண் தொடர்பான நோய்களுக்கு பரிகாரமாக நாம் தெய்வங்களை வழிபடலாம். உதாரணத்திற்கு சூரியன் சம்பந்தமான கண்ண நோய்களுக்கு சூரிய வழிபாடு மிகச் சிறந்தது . அதேபோல் சந்திரன் தொடர்பான கோளாறுகளால் ஏற்படும் கண் நோய்களுக்கு அம்மன் வழிபாடு சிறந்தது . வாழ்க்கையில் பல பேருக்கு ஏதாவது ஒரு வகையில் கண் குறைபாடு இருந்தாக வேண்டும் என்பது தற்போதைய காலகட்டத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது . இது போன்ற சமயங்களில் காய்கறிகள் பழங்கள் போன்றவை சரியாக உட்கொள்வதன் மூலம் கண் நோய்களை வராமல் தடுக்கலாம் .
ஆனாலும் ஒருவர் ஜாதகத்தில் கண் நோய் தொடர்பான கிரகங்கள் கெட்டுப் போய் அந்த தசா புத்தி நடக்கும் காலத்தில் பார்வை குறைபாடு ஏற்படத்தான் செய்யும் . இதற்காக குழந்தையிலேயே அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து கண் நோய் தொடர்பாக நோய்கள் வருமா? வராதா என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் உணவு பழக்கங்களின் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கண் பாதிப்பு ஏற்படாத வகையில் காப்பாற்றலாம் .
ஜாதகரின் விளக்கமும் மருத்துவ ஆலோசனையும் :
ஒருவர் ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடம் காண்பித்து அவர்களுக்கு எந்த மாதிரியான கிரகங்களினால் அன்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து உடனடியாக எதிர்காலத்தில் கண் நோய் வராமல் தடுக்க முறையான மருத்துவ ஆலோசனை பெற்று மருத்துவரை அணுகி அதன் மூலமாக உங்கள் கண் நோய்களை சரி செய்து கொள்ளலாம் . அறிவியல் வளர்ந்து நிற்கின்ற இந்த காலத்தில் சரி செய்ய முடியாத நோய்கள் என்று பெரும்பாலும் எதுவும் இல்லை அதிலும் குறிப்பாக கண் நோய்களை எளிதில் மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான உணவு பழக்க வழக்கங்களின் மூலமாக நாம் சரி செய்து கொள்ளலாம் தெய்வ பக்தி உடன் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றும்போது நமக்கு வருகின்ற நோய்களை நம்மால் விரட்ட முடியும் .
நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையே ஒரே வழி. நம்பிக்கை இருப்பவர்கள் கிரக பலன்களை துணையாக மட்டுமே கொள்ளலாம்