Vastu | பறவைகளின் படத்தை வீட்டில் வைக்கிறது எதுக்கு..? வாஸ்து நிபுணர் சொல்வது இதுதான்..
வெற்றிக்கும், புகழுக்கும் பறவையின் படத்தை தெற்கு திசையில் வைப்பது சிறந்தது என ஆச்சார்யா இந்து பிரகாஷின் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கும், புகழுக்கும் பறவையின் படத்தை தெற்கு திசையில் வைப்பது சிறந்தது. மேலும் பீனிக்ஸ் பறவையின் படம் இருந்தால் இன்னும் சிறப்பாக அமையும். ஏனெனில் பீனிக்ஸ் பறவை வெற்றி, புகழ் மற்றும் வளர்ச்சி ஆகியவைகளை பெற்றுத் தரக்கூடிய ஆற்றல் வாய்ந்தது என்கிறார் இந்து பிரகாஷ்
கடினமாக உழைத்தும் வெற்றியும், புகழும் கிடைக்காதவர்கள் தங்கள் வீட்டில் பறவைகளின் படத்தை வைக்கலாம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வீட்டில் நீங்கள் வைக்கும் பொருட்களின் விதம் சாதகமான பலன்களையும், நன்மைகளையும் தரும் என்கிறார். ஆச்சார்யா இந்து பிரகாஷின் சிந்தனை படி, பறவைகளின் படங்கள் வீட்டிற்குள் நேர்மையை கொண்டு வருகின்றன. பறவைகள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பறவைகளின் படங்கள் வீட்டிற்கு நேர்மறையான முடிவுகளைக் கொண்டு வருகின்றது. மேலும் வீட்டில் இருக்கும் நபர்களை வெற்றி பெறச் செய்கிறது.
வாஸ்து படி, பறவைகள் இருக்கும் இடத்தில், சுற்றுச்சூழல் தானாகவே மகிழ்ச்சியாக மாறி விடும். வெற்றிக்கும், புகழுக்கும் பறவையின் படத்தை தெற்கு திசையில் வைப்பது சிறந்தது. மேலும் பீனிக்ஸ் பறவையின் படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் மையும். ஏனெனில் பீனிக்ஸ் பறவை வெற்றி, புகழ் மற்றும் வளர்ச்சி ஆகியவைகளை பெற்றுத் தரக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. இந்த பறவையின் படமோ, அல்லது ஒரு சிலையை வீட்டின் தெற்கு பகுதியில் வைப்பதன் மூலம், வெற்றிக்கு தடைகளாகக அமையும் காரியங்களில் இருந்து எளிதாக வெளி ஏறலாம். இது ஒரு நபரின் இலக்கை பெரும் உதவியாகவும், ஆற்றல் மி்க்கதாகவும் உள்ளது. ஆனால் உண்மையில், பீனிக்ஸ் பறவை ஒரு பறவை அல்ல, இது ஒரு புனைகதை படைப்பு, இது வெற்றியின் வடிவமாகவே கருதப்படுகிறது.
வீட்டின் மகிழ்ச்சி மற்றும் வளம் என்றென்றும் இருக்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய விஷயங்களை பின்பற்றினால் போதும் என்று பலருக்கும் தெரிந்த ஒன்றே. அதில் தேங்காய், மயில் இறகு மற்றும் ஒரு ஜோடி பறவைகள் உட்பட பல பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பறவைகள் என்பது பண்டைய காலங்களிலிருந்து இந்திய கலாச்சாரத்தை ஒருங்கிணைத்ததாகும். அழகான பறவைகளின் படங்கள் அல்லது உருவங்களை வீட்டில் வைத்திருந்தால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் அன்பும் அமைதியும் குறைவில்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது. வாத்துகள், கிளிகள், மயில்கள் போன்ற ஒரு ஜோடி பறவைகளின் படத்தை வீட்டில் வைப்பது வீட்டில் உள்ள உறுப்பினர்களிடையே அன்பை அதிகரிக்கும். அத்தகைய ஜோடி பறவைகளை புதிதாக திருமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது என்றும் கருதப்படுகிறது.