(Source: ECI/ABP News/ABP Majha)
Vastu Tips for Hall: ஹாலில் எந்த பொருள் எங்கு இருக்க வேண்டும்… பாசிட்டிவ் எனர்ஜியை பெறுவதற்கான வாஸ்து டிப்ஸ் இதோ!
அறைகளை வைக்க வேண்டிய திசையைத் திட்டமிடுவதற்கும், ஜன்னல்கள், ஃபர்னிச்சர்கள் வைப்பதற்கும், கதவு வைக்கும் உயரங்கள், திசைகள் அறிவதற்கும் வாஸ்து கொள்கைகளைப் பயன்படுத்தலாம்.
நம் வாழ்வில் வெற்றியை பெற, நல்ல ஆரோக்கியமான உட்ல் நலன் வேண்டும். அந்த உடல்நலனையும், வெற்றியையும் பெற நம் சுற்றம் பாசிட்டிவ் எனர்ஜிகளுடன் இருக்க வேண்டும். வீடு முழுவதும் தடையின்றி ஆற்றல் பாய வேண்டும். இவற்றிற்கு உதவுவதுதான் வாஸ்து. குறிப்பாக நாம் குடும்பமாக கூடும் இடம் என்பது ஹால் ஆகும். அவற்றை பற்றி தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதில் ஃபர்னிச்சர்கள் வைப்பதற்கும், வாசல் கதவு வைகும் திசைகள் அறிவதற்கும், ஃபர்னிச்சர்கள் போன்றவற்றை தேர்வுபெய்யவும், அலங்கரிக்கவும் வாஸ்து கொள்கைகளைப் பயன்படுத்தலாம். இதற்காக சிலர் வாஸ்து நிபுணர்களை அழைத்து வந்து சரி செய்வது உண்டு. ஆனால் அவற்றில் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும். நாமே நமது ஹாலை வாஸ்துவுடன் அலங்கரித்து நிம்மதியாக வாழலாம்.
வாசல்
நல்ல பலன்களைப் பெற நுழைவு கதவு வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். அழகான பெயர்ப்பலகை, மலர் தோரணம் மற்றும் லைட் போன்றவற்றால் நுழைவாயிலை அலங்கரிக்கவும். கதவுக்கு அருகில் ஷூ ரேக் வைக்க வேண்டாம்.
(Image: Architectural Digest India)
ஹால் இருக்க வேண்டிய திசை
வாஸ்து படி ஹால், கிழக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும். டைனிங் ஏரியாவுடன் ஹால் இணைக்கப்பட்டிருந்தால், அது ஹாலுக்கு கிழக்கு அல்லது தென்கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். அதோடு சமையலறைக்கு அருகில் வைக்கப்பட வேண்டும்.
ஃபர்னிச்சர்கள்
வட்டமான வடிவத்தில் ஃபர்னிச்சர்கள் வேண்டாம். அதே போல முக்கோணம் போன்ற ஒற்றைப்படை வடிவ ஃபர்னிச்சர்களையும் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, சதுர அல்லது செவ்வகப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும். பிளாஸ்டிக், இரும்பு போன்ற செயற்கை பொருட்களுடன் ஒப்பிடும்போது, மரத்தாலான ஃபர்னிச்சர்கள் அதிக பாசிட்டிவ் ஆற்றலை வெளியிடும். ஹாலில் சோஃபாக்கள் உட்பட மற்ற ஃபர்னிச்சர்களை மேற்கு அல்லது தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். ஹாலில் தென்கிழக்கு சுவரில் டிவியை வைக்க அறிவுறுத்தப்படுகிறது.
(Image: Architectural Digest India)
ஹாலில் அலங்காரப் பொருட்கள்
ஹாலை எப்போதும் நேர்த்தியாக வைத்திருங்கள். கூடுதல் ஃபர்னிச்சர் மற்றும் தேவையற்ற பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும். துக்கம் அல்லது விரக்தியை சித்தரிக்கும் கலைப்படைப்புகள் அல்லது அலங்காரங்களை ஒருபோதும் ஹாலில் வைக்க வேண்டாம். உடைந்த கண்ணாடிகள் மற்றும் செயல்படாத மின்சாதனங்கள் போன்ற பொருட்களை அகற்ற வேண்டும். வாஸ்து படி அவை துரதிர்ஷ்டத்தையும் எதிர்மறை ஆற்றலையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. அல்லிச்செடி, மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் போன்ற காற்றைச் சுத்திகரிக்கும் தாவரங்ளால் ஹால் பகுதியை அலங்கரிக்கவும்.
ஹாலில் பயன்படுத்த வேண்டிய நிறங்கள்
வாஸ்து படி, வெள்ளை, கிரீம் மற்றும் பழுப்பு போன்ற நடுநிலை நிறங்கள் ஹாலுக்கு ஏற்ற நிறங்கள் ஆகும். மேலும் நீலம், பச்சை அல்லது வெளிர் மஞ்சள் போன்றவையும் பயன்படுத்தலாம்.