மேலும் அறிய

INDvsIRE 2nd T20: தொடரை வெல்லுமா பும்ராவின் இளம்படை?.. அயர்லாந்து - இந்தியா இடையே இன்று 2வது டி-20 போட்டி

இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

அயர்லாந்து சுற்றுப்பயணம்:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்த, பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து காயத்திலிருந்து மீண்டு 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள, பும்ரா தலைமையில் இளம் இந்திய அணி தற்போது அயர்லாந்து சென்றுள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்டடி-20 தொடரில் விளையாட உள்ளது.  டப்ளினில் நடைபெற்ற முதல் போட்டியின் பாதியில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று  1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டி-20 போட்டி:

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது. டப்ளின் பகுதியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதில் வென்று தொடரை கைப்பற்ற பும்ரா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் வாய்ப்பை நீட்டிக்க அயர்லாந்து அணி தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி நிலவரம்:

இந்திய அணியின் பும்ரா தலைமையிலான பந்துவீச்சு இளம் வீரர்களுடன் வலுவாகவே காணப்படுகிறது. ரவி பிஷ்னோய் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளனர்.  டாப் ஆர்டருக்கு நேர்த்தியாக பந்துவீசினாலும், மிடில் மற்றும் டெயில் எண்டர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் இந்திய அணி சிரமப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடைசி போட்டியில் கூட, 8வது வீரராக களமிறங்கிய அயர்லாந்து வீரர் மெக்கார்த்தி அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டெயில் எண்டர்களை வீழ்த்த வியூகங்களை வகுப்பது இந்திய அணிக்கு அவசியம். பேட்டிங்கில் கெய்க்வாட், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் சஞ்சு சாம்சன் என பெரும் பட்டாளமே உள்ளது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் மைதானம் அளவில் சிறியது என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால், புதுப்பந்தில் ஓவர்களை வீசும்போது பந்துவீச்சாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். இதனை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்

உத்தேச இந்தியா அணி : ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget