Today Rasipalan: மீனத்துக்கு வெற்றி...! மகரத்துக்கு கோபம்..! அப்போ உங்களுக்கு என்ன நடக்கும் இன்று..?
எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்று கீழே விரிவாக காணலாம்.
நல்ல நேரம் :
காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
அதிகாலை 1.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மையான நாளாக அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த நற்செய்தி ஒன்று வந்து சேரும். திடீர் வெளியூர் பயணத்தால் யோகம் அடிக்கும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வீண்செலவு ஆகும். நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இடையே கொடுக்கல், வாங்கலில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெளியிடங்களில் உணவு உண்பதை, நீண்ட தூர பயணத்தை தவிர்க்க வேண்டும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு லாபகரமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக வசூலாகாத கடன்தொகை இன்று வசூலாகும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மங்கல செய்திகள் வாயில் வந்து சேரும். ஆலய வழிபாடு இந்த நாளை மிகவும் சிறப்பாக மாற்றும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவும், தன வரவும் உண்டாகும். நண்பர்கள் மூலம் மிகப்பெரிய உதவி கிட்டும். சொத்தில் நீடித்து வந்த குழப்பம் தீரும். விலகிச்சென்றவர்கள் தானாக வந்து சேருவார்கள்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தொழிலில் மிகுந்த போட்டி உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஆர்டர்கள் வருவதில் தாமதம் உண்டாகலாம். தொழிலில் போட்டியாளர்களிடமும் சாமர்த்தியமாக நடந்து கொள்வது அவசியம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆர்வமான நாளாக அமையும். தொழிலில் மற்றும் வேலைவாய்ப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். அதற்கான பலனையும் இன்று அனுபவிப்பீர்கள். வேலைவாய்ப்பில் பணி நிரந்தரம் உண்டாகும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று கடினமாக அமையும். தொழில் போட்டியாளர்களிடம் இருந்து கடுமையான சவால் ஏற்படலாம். சுற்றத்தாரிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. விளையாட்டு வீரர்களுக்கு புதிய தடங்கல் ஏற்படலாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மறதி உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் உண்டாகலாம். தேவையில்லாத குழப்பங்கள் மனதில் ஏற்படும். இதனால்,ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் மாற்றங்களும், குழப்பங்களும் ஏற்படும். சிவபெருமானை வழிபட்டு அமைதி காணலாம்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நண்பர்கள், சுற்றத்தார் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாராட்டு கிட்டும். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் உழைப்பிற்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அளவுக்கதிகமான கோபம் உண்டாகும். சின்ன, சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுவீர்கள். துர்க்கை அம்மனை வழிபட்டு மன அமைதியை காணுங்கள். குடும்பத்தில் சிறு, சிறு சலசலப்புகள் உண்டாகலாம். பொறுமையை கடைபிடித்தால் மிகப்பெரிய பிரச்சினையை கூட எளிதில் சிறிதாக்கிவிடலாம்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உறவினர் இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணிபுரியும் இடங்களில் சுமூகமாக செயல்பட வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். தொழிலில் இன்று புதிய ஆர்டர்கள் குவியும். எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நண்பர்கள் மத்தியில் புது உத்வேகம் பிறக்கும். தன்னம்பிக்கை ஒளி வீசும்.