Today Rasipalan : கடகத்திற்கு குழப்பம்...! சிம்மத்திற்கு கோபம்...! இன்று உங்களுக்கு என்ன நடக்கப்போது தெரியுமா..?
Today Rasipalan : இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
அதிகாலை 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12 மணி வரை மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பண வரவு உண்டாகும். நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூலாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நல்லவர்கள் நட்பு கிட்டும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை உண்டாகும். கூடா நட்பாய் உடனிருந்தவர்கள் தானாக விலகுவார்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல்கள் தீரும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அமைதி உண்டாகும், மனதில் நீடித்து வந்த குழப்பம் அகலும், பெரியவர்கள் இடையே மிகுந்த மரியாதையாக நடந்து கொள்வீர்கள். இத்தனை நாட்களாக நீடித்து வந்த பிரச்சினை சிக்கல்கள் தீரும்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு குழப்பமான நாளாக அமையும். குடும்பத்தில் நீடித்து வரும் சிக்கலுக்கு முக்கிய முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். பிள்ளைகள் வழி நீடித்து வந்த சிக்கலுக்கு தீர்வு கிட்டும். சிவபெருமானை வணங்கி மன அமைதி காணுங்கள்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு கோபம் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்துவது மூலம் பெரிய ஆபத்தை தவிர்க்கலாம். துர்க்கை அம்மனை வணங்கி மன அமைதி காணுங்கள். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடக்கூடாது.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். தொழிலில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிவபெருமான் துணையிருக்க தைரியத்துடன் இருக்க வேண்டும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அடுத்தவர் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளிப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திவைக்க வேண்டும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீடித்து வந்த போட்டி நீங்கும். குடும்ப பகை நீங்கி, புது மகிழ்ச்சி பிறக்கும். சுபச்செலவுகள் உண்டாகும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாகும். பணவரவும், தனவரவும் உண்டாகும். தொழிலில் வசூலாக வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்தில் உற்சாகம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன அமைதி கிட்டும். மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கவலை அகலும்,. பெற்றோர்கள் வழி செயல்படுவீர்கள். சகோதர வழி ஆதரவு கிடைக்கும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் பொறுமையாக செயல்பட வேண்டும். தேவையற்ற விவகாரங்களில் மனதைப் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். விநாகயப்பெருமானை வணங்கி அருள் பெறுவீர்கள்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் இன்று கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை அடைவீர்கள்,. வீண் விவகாரங்களில் கவனம் செலுத்தக்கூடாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்