Today RasiPalan : தனுசு ராசிக்காரர்களே கவனம் தேவை...! மகர ராசிக்காரர்களே ஜாலியா இருங்க..! இன்று யாருக்கு எப்படி?
இன்றைய நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை
இராகு :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
சூலம் – கிழக்கு :
மேஷம் :
மேஷ ராசிக்காரர்ளே இந்த நாள் உங்களுக்கு சுபமான நாளாக அமையும். நீண்ட நாள் நினைத்து வந்த காரியம் கைகூடும். புதிய பொருட்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாளாக அமையும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். நீண்ட நாட்களாக மனதில் நீடித்து வந்த குழப்பம் நீங்கி மனம் அமைதி பெறும். ஆலயங்கள் சென்று வழிபாடு செய்வீர்கள்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இன்று நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணங்கள் செலவு செய்வதில் மிகுந்த கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகள், புதிய பொருட்கள் வாங்குவது குறித்து யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். நீங்கள் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு இன்று நல்ல பலன் உண்டு. எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உயர்வான நாளாக அமையும். பணிபுரியும் இடங்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். இறைவழிபாடு உங்களை மேலும் அமைதியாக்கும். பிடித்தவர்களுடன் பயணம் செய்து மகிழ்வீர்கள். பெற்றோர்கள்- பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு அகலும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்ளே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் வழியே மிகப்பெரிய உதவி கிடைக்கும். திருமணப் பேச்சுக்கள் சுபமாக முடியும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். குடும்பத்தார் மீது உங்களுக்கு அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்கள் வாங்க நினைத்த பொருளை இன்று வாங்கி மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல்களால் ஆதாயம் உண்டாகும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. தேவையில்லாத விவகாரங்களை விட்டு விலகிச் செல்வதே நல்லது. கடன் வாங்குவதில் யாருக்கும் உத்தரவாதம் அளிக்காதீர்கள்.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ் தேடி வரும். தொழிலில், வேலைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணவரவு, தனவரவு அதிகரிக்கும். புதிய ஆலோசனைகள் பிறக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். காதலர்கள் இடையே புரிதல் அதிகரிக்கும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்தநாள் உங்களுக்கு போட்டி அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டி மேலும் அதிகரிக்கும். இந்த போட்டி ஆரோக்கியமாக அமைய இறை வழிபாடு அவசியம்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன நிறைவான நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் இருந்த சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.





















