இன்றைய ராசி பலன்: எந்த ராசிக்கு வீடு தேடி பணம் வரும்?

இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.

FOLLOW US: 

ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 


சந்திராஷ்டமம்:


திருவோணம், அவிட்டம்


மேஷம்: 


இன்று காது குளிர நற்செய்திகளை கேட்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த பாக்கி, பலன் போன்றவை வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதே நேரத்தில் உறவினர்கள் தொல்லை இருக்கும். 


ரிஷபம்:


பரிசு, பொருள் பெற்று மகிழும் நாள் இன்று. விழாக்களில் கலந்து கொண்டு குதூகலிப்பீர்கள். அதே நேரத்தில் நண்பர்களுடனான தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணத்தில் மகிழ்வீர்கள். 


மிதுனம்:


ஆர்வமுடனும், ஆரோக்கியத்துடனும் செயல்பட வேண்டிய நாள் இன்று. நீண்ட நாள் நினைத்திருந்ததை இன்று ஆர்வமுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தார் அதற்கு பக்கபலமாக இருப்பார்கள். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். 


கடகம்:


செய்யும் தொழிலில் மேன்மை அடைவீர்கள். விட்டுக் கொடுத்து போவதால் இன்று பலரால் பாராட்டப்படுவீர்கள். இது நாள் வரை இருந்த நற்குணங்களுக்கு பாராட்டுகள் குவியும். அதே நேரத்தில் உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிருங்கள். நண்பர்களுடன் அனைத்தையும் பகிர வேண்டாம். 


சிம்மம்:


கடந்த சில நாட்களாக இருந்த மனக்கவலை நீங்கி, இன்பம் பொங்கும் நாள் இன்று. உடல்நலக்குறைவு சீராகும். குழந்தைகள் வழி மகிழ்ச்சி கிட்டும். உறவினர்கள் வீட்டிற்கு வருவர். நல்ல விருந்து உண்டு மகிழ்வீர்கள். அதே நேரத்தில் தேவையற்ற முன்கோபத்தை யாரிடமும் காட்டி விட வேண்டாம். 


கன்னி:


இன்று கடுமையாக உழைக்க வேண்டிய நாள். பல தடங்கல் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உழைத்தால் கை மேல் பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் சென்றால் கவனம் தேவை. வீண் மனக்குழப்பங்கள் வேண்டாம். 


துலாம்:


தன வரவு கூடும் நாள். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு சேமிப்புகளை முறைப்படுத்தவும். முடிந்தவரை உணவுகளை சமைத்து உண்ணவும். விளையாட்டுத் தனமாக முடிவுகளை எடுத்துவிட வேண்டாம். வீட்டு பெரியவர்களிடம் ஆலோசித்து எதையும் செயல்படுத்துங்கள்.


விருச்சிகம்:


நீண்ட நாள் இருந்த மன உளைச்சலில் இருந்து இன்று விடுபடுவீர்கள். மனம் போல் வாழ்வு என்பார்கள், அது போன்ற வாழ்வு இன்று உங்களுக்கு. கோபத்தால் நற்பண்புகளை இழந்து விட வேண்டாம். தேவையற்ற குழப்பங்களை தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். வீண் பயம் வேலைக்கு ஆகாது. 


தனுசு:


குடும்பத்தாரிடம் பாசமும், நேசமும் காட்டும் நாள். அவர்களின் அன்புக்கு உரிய அன்பை செலுத்துங்கள். மாத கடைசி என்கிற வருத்தம் வேண்டாம். போதிய தனவரவு இருக்கும். நெருக்கடியை எளிதில் சமாளிப்பீர்கள். வழக்கமான உத்வேகம் இருந்தாலே போதும்.


மகரம்:


அனைவரிடத்திலும் பரிவு காட்டுங்கள். அது உங்களுக்கு பலனாக அமையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பண விசயத்தில் உஷாராக இருங்கள். பிக்பாக்கெட் தொல்லை வரலாம்.  கவனமாக செயல்படவும்.


கும்பம்:


இன்றைய நாள் விரய நாளாக உள்ளது. வீண் செலவுகள் தேடி வரும். கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளை கைவிடலாம். குடும்பத்தார் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அழைச்சல் ஏற்படும். அனைத்தையும் பொறுமையுடன் எதிர்கொண்டால், நிம்மதியான சூழல் நிலவும்.


மீனம்:


மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதற்கு தேவையான சூழலை நீங்களே உருவாக்குவீர்கள். வீண் குழப்பங்களை, சந்தேகங்களை தூக்கி வீசுங்கள். அனைவரிடமும் அன்பாக பழகுங்கள். நண்பர்கள் வழி உதவிகள் கிடைக்கும். 

Tags: today horoscopes horoscopes astro jothidam rasi palan rasi

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

மயிலாடுதுறை: சிறப்பாக நடைபெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா..!

மயிலாடுதுறை: சிறப்பாக நடைபெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா..!

Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

டாப் நியூஸ்

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!

Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!