‛கோவிந்தா ஹரி கோவிந்தா...’ சென்னையில் தொடங்கியது திருப்பதி திருக்குடை ஊர்வலம்!
பக்தர்கள் திருக்குடை வைபவங்களை வீட்டில் இருந்தே கண்டு களிப்பதற்கு வசதியாக திருக்குடை சிறப்பு பூஜைகளானது Tirupatikudai என்ற முகநூல் பக்த்தில் லைவ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழாவிற்காக சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. இதனை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் பெருமாளைச்சென்று தரிசனம் செய்தாலே புண்ணியங்கள் கிடைக்கும் என்பதை மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் தான் திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா கோலக்கலத்துடன் நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 2 வகையாக மங்கலப்பொருள்கள் ஆண்டு தோறும் திருமலையில் உள்ள பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன். அதில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், மற்றொன்று தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள். இந்நிகழ்வுகளானது ஒவ்வொரு ஆண்டும் பராம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டும் கோலகமாக துவங்கியுள்ளது.
இதற்காக சென்னை அயனாவரத்தில் உள்ள திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டை சார்பில், சென்னையில் இருந்து திருக்குடைகள் எடுத்துச்சென்று சமர்ப்பிக்கப்படும். அதன்படி நேற்று முன்தினம் நான்கு திருக்குடைகள் பாரிமுறை சென்னகேசவ பெருமாள் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பக்தர்கள் விண்ணை முழங்க கோவிந்தா… கோவிந்தா…. கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து திருக்குடை ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க திருப்பதி நோக்கி புறப்பட்டது. முன்னதாக இந்த ஊர்வலத்தை தமிழக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
இந்தத் திருக்கொடை ஊர்வலம் யானைகவுனி, அவதான பாப்பையா ரோடு, கே.எச். ரோடு வழியாக அயனாவரம் காசிவிஸ்வநாதர் கோவிலை வந்தடைந்தது. இதனை பள்ளி, கல்லூரி மாணவிவகள் பாடல்களைப்பாடியும், நடனமாடியும் வரவேற்று வழிபட்டனர். அங்கேயே நேற்று முன்தினம் இரவு தங்கிய திருக்குடைகள், நேற்று காலை மேளதாளம் முழங்க மீண்டும் புறப்பட்டது. தொடர்ந்து வில்லிவாக்கம், ஆவடி, புத்தூர், திருவள்ளுர் வழியாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு மக்கள் வழங்கும் திருக்கடைகள் இன்று சென்றடைகிறது. பின்னர் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் பிரமோற்சவத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஊர்வலமாக வந்த திருக்குடைகளை வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர் திருப்பதிக்கு வந்து தரிசிக்கும் வேளையில், கொரோனா தொற்றின் காரணமாக அதிகளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் திருக்குடை வைபவங்களை வீட்டில் இருந்தே கண்டு களிப்பதற்கு வசதியாக திருக்குடை சிறப்பு பூஜைகளானது Tirupatikudai என்ற முகநூல் பக்த்தில் லைவ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.