மேலும் அறிய
Advertisement
திருவண்ணாமலையில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்; பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ விழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ விழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இங்குள்ள நந்திக்கு மாதத்தில் இரண்டு முறை அபிஷேகங்கள் நடைபெறும். அமாவாசை ,பௌர்ணமி என வரும் இரண்டு நாட்கள் முன்பாக இது நடைபெறும்.
கருவறையில் எதிரே உள்ள பரணி தீப மண்டபத்தில் உள்ள பிரதோஷ நந்திக்கும், சரவிளக்கு நந்தி, அதிகார நந்தி, கொடிமரம் நந்தி, கிளி கோபுரம் நந்தி மற்றும் மலை பார்க்கும் நந்தி என்று அழைக்கப்படுகின்ற பெரிய நந்திக்கும் இன்று மாலை அபிஷேக பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி அம்மாவாசை பிரதோஷம் சமூக இடைவெளி உடன் எளிமையாக நடைபெற்றது. திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பிரதோஷ கால பூஜை சமூக இடைவெளி விட்டு திருக்கோயில் சிவாச்சாரியார்கள் எளிமையான முறையில வேத மந்திரங்கள் முழங்க பூஜை நந்தி பகவானுக்கு நடைபெற்றது.
நந்தி பகவானின் சிறப்பு:
சிவாலயங்களில் கருவறை ஈசனை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அதே அளவுக்கு நந்தியையும் வழிபட வேண்டும். நந்தி என்றால் ஆனந்தத்தை தருபவர் . நந்தியிடம் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அவர் ஈசனிடம் தெரிவித்து நமது வாழ்க்கையை ஆனந்த மயமாக்குவார் என்பது ஐதீகமாகும்.
பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளைக் கண்டு வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும். இத்தகைய சிறப்பு பெற்ற நந்தி திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமான சிறப்புகளுடன் திகழ்கிறார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion