மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்தது

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில்.

ஆண்டுதோறும் தமிழகம், கேரளா, கர்நாடகாவிலிருந்து பக்தர்கள் வருவார்கள். ஆனால், கொரோனா தொற்று காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் மிகக்குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்தது

ஐயப்ப தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் ஆகியன கட்டாயமாக்கப்பட்டன. 

கேரளாவில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக வந்த மாதாந்திர பூஜை நாட்களிலும் கடைபிடிக்கப்பட்டன.
அதேவேளையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக வருகிற 15-ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (16-ஆம் தேதி) அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜை தினத்தில் மட்டும் 30ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சாமி தரிசனத்துக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்தது

எத்தனை பேர் முன்பதிவு?

புத்தாண்டு தரிசனத்துக்கான முன்பதிவும் நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நாட்களில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பக்தர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா ஆர்டிபிசிஆர். பரிசோதனை ‘நெகட்டிவ்’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த விதிகளை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.  அதேவேளையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் உடனடி முன் பதிவுக்கு பாஸ்போர்ட் நகல் மட்டும் கொடுத்தால் போதும். மற்றவர்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் கொடுக்க வேண்டும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget