‛ஏழைகளை நினைவில் கொள்ளுங்கள்..’ -போப் பிரான்சிஸின் கிறிஸ்துமஸ் உரை!
ஏழை, எளிய மக்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டுமென போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை சற்று களையிழந்து இருக்கிறது.
பொதுவாக கிறிஸ்துமஸ் தினத்தன்று வாடிகன் சிட்டியில் பலர் கூடும் சூழலில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தலால் இரண்டாயிரம் பேர் மட்டுமே கூடினர். அங்கு போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
Dear sister or brother, if as in Bethlehem, the darkness of night overwhelms you, if the hurt you carry inside cries out "You are worthless", tonight God responds and tells you: “I love you just as you are. I became little for you. Trust me and open your heart to me". #Christmas
— Pope Francis (@Pontifex) December 24, 2021
அதனையடுத்து உரையாற்றிய போப், மனிதர்கள் தன்னலம் பார்ப்பதைவிட பிறர் நலம் பார்த்து சேவை செய்ய வேண்டும். இந்த வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்களை கடந்த ஏழை, எளிய மக்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
This morning, the First Lady and I stopped by the Children’s National Hospital to spread a little holiday cheer. We hope everyone has a happy, healthy, and safe holiday season. pic.twitter.com/5eBIDRgptp
— President Biden (@POTUS) December 24, 2021
கிறிஸ்துமஸையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்கிருக்கும் குழந்தைகளுடன் உரையாடி பரிசுகளை வழங்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Merry Christmas: மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம்... பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்!