மேலும் அறிய

Panguni Matha Rasi Palan: மேஷம் முதல் கன்னி வரை.. பங்குனி மாத ராசிபலன்கள் இதோ..!

Panguni Matha Rasi Palan: தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி எந்த ராசியினருக்கு எப்படி அமைந்துள்ளது என்பதை காணலாம்.

மேஷம்

விடாப்பிடியாகச் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே.. சூரியன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். தாய்மாமன் வழி உறவினர்களிடம் கோபமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செல்லப்பிராணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் விடாப்பிடியாக செயல்பட்டு விரும்பியதை நிறைவேற்றி கொள்வீர்கள்.

உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் அதிகரிக்கும். புதன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் ராசியில் இருப்பதினால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத தயக்க உணர்வு ஏற்படும். சுக்ரன் ராசியில் இருப்பதினால் சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு சாதகமாகும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் குடும்பத்தில் இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் குறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குரு போக ஸ்தானத்தில் இருப்பதினால் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.

கல்வி சார்ந்த விரயங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி லாப ஸ்தானத்தில் இருப்பதினால் குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். ராகு ராசியிலே இருப்பதினால் திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். கேது களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் சில நெருக்கடியான சூழ்நிலைகளால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும்.

வழிபாடு : சிவபெருமானை வழிபட சிந்தையில் தெளிவு பிறக்கும். 

ரிஷபம்

பக்குவம் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே.. சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும். செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பணி நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் சிந்தனையின் போக்கில் சற்று கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும்.

பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் இழுபறியான தனவரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். நிதானமான பேச்சுக்களால் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாலின மக்களால் சில விரயங்கள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் பகைமையை குறைத்து கொள்வீர்கள். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் ராசியில் இருப்பதினால் செய்கின்ற பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

செய்ய தவறிய சில செயல்களை செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் பயணங்கள் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது நல்லது. ராகு போக ஸ்தானத்தில் இருப்பதினால் நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மாறுபட்ட அனுபவங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். கேது சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 

வழிபாடு : ஆஞ்சநேயரை வழிபட வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். 

மிதுனம்

புத்திசாலித்தனமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே.. சூரியன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் புரிதல் உண்டாகும். மின்சாரம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். புதிய நுட்பமான விஷயங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செவ்வாய் ராசியில் இருப்பதினால் ஆடம்பர சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. சமூப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும்.

வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் மாற்றங்கள் ஏற்படும். சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குரு தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும்.

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் விதண்டாவாத சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். மனதில் சேமிப்பது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சீருடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் அமையும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதினால் மனை சார்ந்த தொழிலில் முதலீடுகள் மேம்படும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கேது புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

வழிபாடு: முருகப்பெருமானை வழிபட செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். 

கடகம்

தாயுள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே.. சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில வரவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செவ்வாய் போக ஸ்தானத்தில் இருப்பதினால் சிந்தனைகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய முயற்சிகளில் மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். 

மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் தனவரவுகள் மேம்படும். மூத்த உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சனி களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நீண்ட காலமாக தடைபட்ட தனம் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.

பங்குனி 15ஆம் தேதி முதல் சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் வாழ்க்கைத் துணைவரிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ராகு தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மருத்துவம் சார்ந்த துறைகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும். கேது சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உயர்நிலை கல்வியில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும்.

வழிபாடு : அம்பிகையை வழிபட சுபிட்சம் உண்டாகும். 

சிம்மம்

எதிலும் தன்னிச்சையாகச் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே.. சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் மன வருத்தங்கள் ஏற்படலாம். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. 

பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். கேது சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். 

வழிபாடு : தட்சிணாமூர்த்தியை வழிபட கல்வியில் உயர்வு உண்டாகும். 

கன்னி

கனிவாக பழகும் குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். 

பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். காணாமற்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். சனி புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ராகு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கேது குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையும் உண்டாகும்.

வழிபாடு: முருகனை வழிபட செய்கின்ற செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget