மதுரை சித்திரை திருவிழாவில் கைலாசாவில் இருந்து நேரலை வந்த நித்தியானந்தா
”கைலாச நாட்டிலிருந்தே மீனாட்சி சித்திரைத் திருவிழா நேரலையில் காணும் நித்தியானந்தா” திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு அறு சுவை உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார்
கொரோனா தொற்று காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளழகர் மதுரைக்கு வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றுது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு இந்தாண்டு வழக்கமான சித்திரை திருவிழா நடைபெற்றுவருகிறது.
உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது போன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
Nithyananda Participates Chithirai festival through YouTube live streaming. Nidhi has a ashram at Meenakshi temple east entrance. His follower connecting live from here to kailasa.fromthere he is doing some mantras. pic.twitter.com/SItHvOM6L8
— Thangadurai (@thangadurai887) April 8, 2022