Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today Tamil (08-08-2026): ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி சனிக்கிழமையான இன்றைய தினத்தின் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி சனிக்கிழமையான இன்றைய நாள் ஆடி மாதத்தின் 23ம் நாளாகும். இந்த நாளில் பஞ்சாங்கத்தின்படி 12 ராசிகளுக்குமான பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
இன்றைய நாளின் பஞ்சாங்க விவரம்
நாள்: 08.08.2026 - சனிக்கிழமை
திதி: தேய்பிறை தசமி
நட்சத்திரம்: மாலை 3.16 வரை ரோகிணி, அதன்பிறகு மிருகசீரிஷம்
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 08.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 4.45 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை
இராகு:
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
குளிகை:
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் - கிழக்கு
ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்
மேஷம்
உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக்கொள்ளவும். உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.
ரிஷபம்
விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். மனதளவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் சில மாற்றம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கடகம்
எதிர்பார்த்து இருந்த சில பணிகள் நிறைவு பெறும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமித்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் மேம்படும்.
சிம்மம்
திட்டமிட்டு செயல்களில் எண்ணிய முடிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும்.
கன்னி
வியாபாரத்தில் இருந்து தாமதங்கள் குறையும். சுப காரிய முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளின் மேற்படிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கற்பனைத் திறன் மேம்படும். மறதி பிரச்சனைகள் குறையும். செல்வ சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
துலாம்
மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வேலையாட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும்.
விருச்சிகம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்களும் ஒத்துழைப்பும் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம்
தன வருவாய் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.
கும்பம்
உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அரசால் அனுகூலம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான புதிய சிந்தனைகள் மேம்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் பழைய நினைவுகள் மேம்படும். தாயின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
மீனம்
கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியம் கைகூடி வரும். கருத்துக்களுக்கு ஆதரவுகள் மேம்படும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















