மேலும் அறிய

வாழ்வில் அதிசயம் ; அற்புதத்தை நிகழ்த்தும் வெள்ளியங்கிரி மலை பயணம் - அனுபவ கட்டுரை

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம் இயற்கைதான் இறைவன் என்பதை உணர்த்தும், வாழ்வில் புதிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் நிச்சயம் அளிக்க வல்லது. பயணம் களைப்பையும், கஷ்டத்தையும் கொடுத்தாலும், அடிவாரம் இறங்கிய பின்னர் அறிவீர்கள் இந்த ஆயுள் முழுமைக்கான அழகை !

பயணம்தான் வாழ்வின் பரிமாணங்களுக்கு அடிப்படை என நம்பும் கூட்டத்தை சேர்ந்தவன் நான். பல திட்டமிடப்பட்ட பயணங்களை இன்னும் மேற்கொள்ளவே முடியவில்லை என்றாலும், திசைக்கொரு பக்கம் தீட்டப்பட்ட திட்டத்தை அப்படியே அடைகாத்து வைத்திருக்கிறேன். அப்படி அடைக்காக்கப்பட்ட பயணங்களில் திடிரென அமல்படுத்திய பயணம்தான் வெள்ளியங்கிரி.


வாழ்வில் அதிசயம் ; அற்புதத்தை நிகழ்த்தும் வெள்ளியங்கிரி மலை பயணம் - அனுபவ கட்டுரை

எஸ்.ராவின் பயண அனுபவங்களை படித்துவிட்டு முதலில் கர்நாடாகவில் உள்ள ஹம்பிக்கு போகலாம் என்றுதான் முடிவெடுத்தோம். ஆனால், நீல வானம் திடீரென மேகமூட்டமாய் மாறி மின்னலடித்து மழை பெய்யுமே அந்த மாதிரி மின்னலடித்தது நமது வெள்ளியங்கிரி மலை. மகா சிவராத்திரிக்கு முந்தன நாள் மலையேறிவிடலாம் என்ற திட்டத்தோடு சென்னையில் இருந்து நானும் தம்பியும் கிளம்பினோம். பேருந்தில் செல்லும்போதே வெள்ளியங்கிரி மலை குறித்து படிக்க படிக்க, பார்க்க பார்க்க ஆர்வமாகவும் ஆசையாகவும் இருந்தது. பொதுவாகவே கோவை செல்வது என்பது அவ்வளவு பிடித்து போயிருந்தது. அந்த மனிதர்களும் சூழலும் நெஞ்சுக்கு மிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. காலை 6 மணிக்கெல்லாம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்றுவிட்டோம். அங்கேயே குளித்துமுடித்து சாப்பிட்டுவிட்டு, பிரட், ஜாம், தண்ணீர் பாட்டில், குளுக்கோஸ், புளிப்பு மிட்டாய் போன்றவையெல்லாம் வாங்கிக்கொண்டு, ஈசாவிற்கு அடுத்து இருக்கும் பூண்டி செல்லும் டவுன் பஸ்சில் ஏறினோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணம். போகுமிடமெல்லாம் குளுமை, இயற்கையின் அழகு அப்படியே நம்மை மலர்த்திப்போடும்.

சாலையின் இருமருங்கிலும் தென்னை மரங்கள், தோட்டம், தோட்டத்தினுள் இருக்கும் வீடு, வெயிலை பூமியில் இறங்கவிடாமல் தடுத்தாளும் நிகழ், பேருந்தில் நம்மிடையே பயணிக்கும் கொங்கு தமிழ் என ரசித்துக்கொண்டே போகலாம். ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு ஈஷா வாசலில் இறக்கிவிடுவார்கள். அங்கிருந்து ஷேர் ஆட்டோ எடுக்கலாம் அல்லது ஒரு பத்து நிமிடம் நடந்தே சென்றால் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வாயில் நம்மை வரவேற்கும். ஒரு குல்முகர் மலர் மாதிரி, மஞ்சகத்தி பூ மாதிரி இருக்கும் கோயிலுக்குள் நுழைந்தால், வலது புறத்தில் இருக்கிறது அறநிலையத்துறை அலுவலகம் அங்குதான் நாம் மலையேற மூங்கில் தடி பெற வேண்டும். மூங்கில் தடி இல்லாமல் மலை ஏறவே முடியாது. ஒரு தடி 30 ரூபாய். தடியை வாங்கிக்கொண்டு மலையடிவாரத்தில் இருக்கும் விநாயகரை கண்களை மூடி வணங்கிக் கொண்டிருந்தோம். கண்களை திறக்கும் முன் நம் நெற்றியில் விபூதியை பூசிவிட்டு, கையில இத வச்சுக்குங்க மலை ஏற முடியலன்னு தோணுறப்பல்லாம் எடுத்து பூசிக்குங்க. அவன் கூட்டிட்டு போய்டுவான் என்றார் அங்குள்ள பூசாரி. யார்றா அந்த அவன் ? வேற யாரயும் கூட்டிட்டு வந்துட்டியா என தம்பியை லேசாக திரும்பி பார்த்தபோது அவனென்றால் சிவன் என்றான் பவ்யமாக.வாழ்வில் அதிசயம் ; அற்புதத்தை நிகழ்த்தும் வெள்ளியங்கிரி மலை பயணம் - அனுபவ கட்டுரை

விபூதியை பெற்றுக்கொண்டு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்று உடம்போடு மலையின் படிகளை உற்சாகமாக ஏறத் தொடங்கினோம். வெற்று உடலோடு மலையேறு மூலிகைகளின் வாசத்தை கொய்து வரும் காற்று உடலில் படவேண்டும் என்று ஏற்கனவே மலையேறிய ஜோ.ம அண்ணன் சொல்லியிருந்தார். அப்படியே செய்தோம். சரியாக காலை 10 மணி. ஒரு 30 லிருந்து 35 படிகள்தான் ஏறியிருப்போம். மூச்சு வாங்கத் தொடங்கிவிட்டது. அப்டியே போட்றா சிட்டிங்க என உட்காந்துவிட்டோம். என்னடா இப்பவே இப்படி இழைக்குது என சொல்லத் தொடங்கியதிற்குள், வாங்கி வந்திருந்த குளோக்கோஸ் பாக்கெட்டுகளில் இரண்டை முடித்துவிட்டான் தம்பி. டேய் டேய் இன்னும் ஒரு மலை கூட கம்ளீட் பண்ணலடா என அவனிடமிருந்து பாக்கெடுக்களை பிடுங்கி பொத்தி வைத்துக்கொண்டேன்.

பின்னர் எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினோம். இந்த வாழ்வை போலவே படிகளும் கரடு முரடகாவே இருந்தது. ஒரு அடி எடுத்து வைக்கவே அரை லிட்டர் ஆக்சிசன் இழுத்துக்கொண்டோம். எங்களோடு சென்னையில் இருந்து வந்திருந்த இரண்டு இளவட்டங்கள் இணைந்துகொண்டன. சேர்ந்து பயணத்தை தொடங்கினோம். அவர்களின் ஒருவன் ஏற்கனவே மலையேறியவன் என்பதால் அடுத்த மலை எப்ப வரும் என்ற கேள்வியை ஏழாவது மலை வரை கேட்டுக்கொண்டே போனோம். முதல் மலை முடிவில் இரண்டாவது மலை தொடக்கத்தில் வீற்றிருக்கிறார் வெள்ளை பிள்ளையார் பெயர்தான் வெள்ள பிள்ளையார் ஆனால் வழக்கம்போல் கருப்பான உருவத்தோடு உவப்பாக உட்கார்ந்திருக்கிறார்.வாழ்வில் அதிசயம் ; அற்புதத்தை நிகழ்த்தும் வெள்ளியங்கிரி மலை பயணம் - அனுபவ கட்டுரை

அடுத்த நாள் மகா சிவராத்திரி என்பதால் நல்ல வேளையாக ஒவ்வொரு மலைக்கும் ஒரு கடை போட்டிருந்தார்கள். வழக்கமான நாட்களில் கடைகள் இருக்காதாம். கடைகளுக்கான பொருட்களை கூலி கொடுத்து ஆட்களை விட்டு தூக்கி வருகிறார்கள். ஒரு பையை மாட்டிக்கொண்டே செல்லும்போதே இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது. கூலி ஆட்கள் பொருட்களை மூட்டையாக கட்டி தூக்கி வருவதை பார்ப்பதற்கு அவ்வளவு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருந்தது.

மனிதர்களால் சாத்தியமில்லை என்று சொன்ன எவ்வளவோ விஷயங்களை சாத்தியப்படுத்தி காட்டியவன் இதே மனிதன் தானே என நினைத்துக்கொண்டேன். வெள்ள பிள்ளையார் இருக்கும் இந்த மலைதான், முதல் மலையின் முடிவு இரண்டாவது மலையின் தொடக்கம். இரண்டாவது மலை முதல் மலையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டிருக்கும். அதே கரடு முரடான படிகள் சற்று குறைந்து கொஞ்சம் அகண்டு இருக்கும். இப்போது காட்டின் அடர்த்தி இன்னும் மிகுந்து காற்றின் ஈரம் அதிகரித்திருக்கும். கால்கள் வலி கொண்டாலும் பறவைகளின் கீச்சொலியும் இயற்கை தரும் இன்பமும் நம்மை முன்னகர்த்தி செல்ல உத்வேகம் கொடுக்கும்.


வாழ்வில் அதிசயம் ; அற்புதத்தை நிகழ்த்தும் வெள்ளியங்கிரி மலை பயணம் - அனுபவ கட்டுரை

இதம் தரும் நிகழில் சற்று அமர்ந்து, இளைப்பாறி, மூச்சிழுத்து அந்த காற்றை சுவாசிக்கும்போது காட்டில் உலவும் அதே காற்றாகுவோம். மலையில் இருந்து ஏறுபவர்கள் இது எத்தனையாவது மலை என்றும், இறங்குபவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு என்பதையும் வழி நெடுகிலும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இரண்டாவது மலையின் முடிவில், குடிப்பதற்கு அருமையான சுனை நீர் ஜில்லென கிடைக்கிறது. மினரல் வாட்டர் உங்கள் பாட்டிலில் மிச்சமிருந்தால் அதை கீழே ஊற்றிவிட்டு சுனை நீரை பிடித்து நிரப்பிக்கொள்ளுங்கள். குடித்த அடுத்த நொடி புதுதெம்பை கொடுக்கும். சுனையை தாண்டி கொஞ்ச நேரம் மலையேறினால் பாம்பாட்டி சித்தர் குகை இருக்கிறது. இந்த குகைக்குள் அமர்ந்துதான் பாம்பாட்டி சித்தர் இறைவனோடு சென்று கலந்ததாக சொல்கிறார்கள். குகைக்குள் குனிந்து சென்று அவரையும் வணங்கிவிட்டு நடையை கட்டினோம். இப்போது மூன்றாவது மலை தொடங்கியிருந்தது. இரண்டு மலைகளை காட்டிலும் இந்த மூன்றாவது மலை இன்னும் கொஞ்சம் செங்குத்தாக செல்கிறது. படிகளும், தரைகளும் கடினமாகதான் இருந்தது. ஆனால் இயற்கையை ரசித்துக்கொண்டு, அந்த குளுமையை அனுபவித்துக்கொண்டு செல்பவர்களுக்கு கடினம் கூட இலகுவாகபடலாம்.

பொதுவாக இளம் வயது பெண்களை மலையேற அனுமதிக்க மறுக்கிறார்கள். கேட்டால் பாதுகாப்பு என ஏதேதோ சொல்லி பசப்புகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் எல்லோரும் அறிந்ததுதான். சபரிமலைக்கே பெண்கள் போகலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட பிறகு, எங்கள் ஈசனை தரிசிக்க மட்டும் போகக்கூடாதா என்ன என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. உண்மையில், மூன்றாவது மலையேற முக்கவேண்டியிருக்கிறது. ஐந்தாறு இடங்களில் உட்காந்திருப்போம். ஆனால் நம்மை கடந்து வயதான தாத்தாக்களும், பாட்டிகளும் விறுட்டு விறுட்டென மூச்சு வாங்க கடந்து செல்வதை பார்க்கும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அவங்களே போறாங்க நமக்கென்னடா ஏந்திரிங்க போகலாம் என வீராப்பாக நடக்க ஆரமித்து 2 நிமிடத்தில் டேய் இருங்க டா கொஞ்ச உட்காந்துட்டு போகலாம் என விக்க வேண்டியிருக்கிறது.வாழ்வில் அதிசயம் ; அற்புதத்தை நிகழ்த்தும் வெள்ளியங்கிரி மலை பயணம் - அனுபவ கட்டுரை

இன்னும் 4, 5, 6, 7 மலைகள் ஏறவேண்டும் என்று நினைத்தாலே மலைப்பு தட்டுகிறது. கீழே வருபவர்கள் யாரோ தென்னாடுடைய சிவனே போற்றி எனச் சொல்ல நாங்கள் எந்நாட்டவர்க்கும் இறைவா என சொல்லி ஏத்திவிடய்யா என்று வேண்டி கிளம்பினோம். 4வது மலையை கடந்து 5 வது மலையை ஏறும்போது காட்டின் அடர்த்தி குறைந்து நல்ல வெட்ட வெளியாக இருக்கும். மதிய நேரம் என்பதால் உச்சி வெயில் மண்டையை பிளக்க பாறைகளில் கால் வைத்து ஒரு தீப்பிளம்பென கனன்று கொண்டிருந்தோம். 6வது மலை வந்துருச்சுன்னா அங்க ஓடை இருக்கும் குளிச்சா கால் வலியெல்லாம் பறந்துபோயிரும் அது வரைக்கும் கஷ்டப்பட்டு ஏறுங்க என்றார்கள். 6வது மலையில் ஓடை இருக்கும் இடம் செங்குத்தான இறக்கம், பாறைகள் வேறு துருத்திக்கொண்டு கடுமையாக இருக்கும். இந்த பாறையெல்லாம் போட்டவன் எவண்டா அவன கண்டா வரச்சொல்லுங்க என கடுப்பாயிக்கொண்டிருந்தான் தம்பி. நான் வேண்டுமென்றால் சந்தோஷ் நாராயணனிடம் சொல்லவா என கேட்க என் பையிலிருந்த கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் க்ளோஸ். 

இப்போது மலையில் இருந்து மூலிகைகளை நனைத்துக்கொண்டு வரும் தண்ணீர் ததும்பி கிடக்கும் ஓடையை அடைகிறோம். ஓடையில் இறங்கி கால் வைத்தால் உச்சந்தலை வரை ஜிவ்வென ஏறுகிறது. தண்ணீரின் குளுமை. குளிர, குளிர குளித்துவிட்டு ஓடை அருகில் இருக்கும் பாறை தெய்வத்தை வணங்கி உடலெங்கிலும் விபூதியை பூசிக்கொண்டு கிளம்பினால் ஏழாவது மலை அப்பன் ஈசன் இருக்கும் மலையின் தொடக்கம். மாலை நேரம், நீண்ட மண் பாதைகள், குளிர் காற்று, தூரத்தில் துள்ளியூண்டாக தெரியும் சிறுவாணி அணை, சுற்றிலும் பச்சையை பொத்தி வைத்த மலைகள் என கண்கள் அகல விரியும் அழகு.சூரியன் மெல்ல மறைய தொடங்கும் அந்த அற்புதத்தை ரசித்துக்கொண்டே ஏழாவது மலையை ஏறினோம். இருப்பதிலேயே எடக்கு மடக்கான மலை இது.

ஏண்டா அப்பா, இவ்வளவு தூரம் வந்து இங்க உட்காரனுமாடா நீயீ என ஈசனை செல்லமாக வஞ்சுக்கொண்டே செங்குத்தான மலை, சரியில்லாத பாதைகள்,  கால்களை வழுக்கிவிடும்படியான பாறைகளில் கைகளை மெல்ல ஊன்றி ஊன்றி ஏறினோம். ஏழாவது மலையை எட்டியதும் சங்குகள் முழங்கத் தொடங்கின. அப்போது எங்கிருந்துதான் உற்சாகம் வந்ததென தெரியவில்லை. அய்யனை பார்க்க ஓடினோம். முதலில் குகைக்குள் இருக்கும் அம்மனை விழுந்து வணங்கி தரிசித்துவிட்டு, அடுத்து இருக்கும் அப்பனை தரிசித்தோம்.


வாழ்வில் அதிசயம் ; அற்புதத்தை நிகழ்த்தும் வெள்ளியங்கிரி மலை பயணம் - அனுபவ கட்டுரை

ஓம் நமச்சிவாய என்ற சொற்களால் ஏழு மலைகளும், விண்ணும் அதிர்ந்துக்கொண்டிருக்க சுயம்புவென லிங்க உருவாக காட்சி அளிக்கிறார் சிவப்பெருமான். ஏழு மலைகளை கடந்து கஷ்டப்பட்டு வந்து இந்த சிவனை தரிசித்தால் வாழ்வில் ஏற்றம் என்பது உறுதி என இங்கு வரும் எல்லோரும் தெரிவிக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு கடினத்திற்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் மலையேறுகிறார்கள். தங்கள் சிறு குழந்தைகளை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு மலையேறி வரும் தந்தைகளை பார்க்க, பார்க்க கண் கலங்குகிறது. இறைவனுக்காக செல்லவேண்டுமென்பதில்லை, இயற்கையை ரசிக்க, புதிய அனுபவத்தை ருசிக்க மட்டும் கூட நீங்கள் செல்லலாம்..

நிச்சயம் அதிசயம் ; அற்புதம் உங்களுக்குள் நிகழும் !

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Breaking LIVE : அண்ணாமலை எங்களுக்கு போட்டியாளர் இல்லை - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
அண்ணாமலை எங்களுக்கு போட்டியாளர் இல்லை - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
Latest Gold Silver Rate: புதிய உச்சம்.. ரூ.50,000 தொட்ட தங்கம் விலை.. விழி பிதுங்கும் மக்கள்..
புதிய உச்சம்.. ரூ.50,000 தொட்ட தங்கம் விலை.. விழி பிதுங்கும் மக்கள்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Asset : 51 ஏக்கர் நிலம்! அண்ணாமலை சொத்து பட்டியல்PTR Vs Annamalai : ”என்னது MLA QUOTA-வா” அண்ணாமலைக்கு PTR பதிலடி! சரமாரி கேள்விSudha Ramakrishnan : அன்று சோனியாவை எதிர்த்தவருக்கு சீட் கொடுத்த ராகுல்! யார் இந்த சுதா ராமகிருஷ்ணன்!Sowmiya Anbumani : ”WIN பண்ணிருவோம்” ப்ளான் என்ன? சௌமியா அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Breaking LIVE : அண்ணாமலை எங்களுக்கு போட்டியாளர் இல்லை - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
அண்ணாமலை எங்களுக்கு போட்டியாளர் இல்லை - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
Latest Gold Silver Rate: புதிய உச்சம்.. ரூ.50,000 தொட்ட தங்கம் விலை.. விழி பிதுங்கும் மக்கள்..
புதிய உச்சம்.. ரூ.50,000 தொட்ட தங்கம் விலை.. விழி பிதுங்கும் மக்கள்..
Lok Sabha Election 2024: தேனி தொகுதியில் திடீர் ஜெயலலிதா மகள்.. யாருடனும் கூட்டணி இன்றி சுயேச்சை வேட்பாளராக களம்!
தேனி தொகுதியில் திடீர் ஜெயலலிதா மகள்.. யாருடனும் கூட்டணி இன்றி சுயேச்சை வேட்பாளராக களம்!
Lok Sabha Elections 2024: ”காசு இல்லப்பா..!” - தேர்தலில் போட்டியிடாதது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
”காசு இல்லப்பா..!” - தேர்தலில் போட்டியிடாதது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
ERODE MP: காலையிலேயே சோகம்..! மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்
ERODE MP: காலையிலேயே சோகம்..! மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்
IPL 2024 SRH vs MI Match Highlights: மும்பைக்கு சங்கு ஊதிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2024 SRH vs MI Match Highlights: மும்பைக்கு சங்கு ஊதிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Embed widget