மேலும் அறிய

கோயில் நகைகளை கோல்ட் பிஸ்கட்டாக மாற்றி ரூ.20 கோடி வருவாய்: அமைச்சர் சொன்ன அதிரடி யோசனை!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் மக்கள் தானமாக, காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக வைப்பு நிதியில் வைக்க முடிவு.

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் பக்தர்கள் தானமாக, காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கி, அவற்றை தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி அதை வைப்பு நிதியாக வைத்தால் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டலாம் என அமைச்சர் சேகர்பாபு யோசனை கூறியிருக்கிறார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதனைத் தெரிவித்தார்.
சேலத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்தற்காக அமைச்சர் சேகர்பாபு சேலம் சென்றிருந்தார். திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் கோயிலில் தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள நந்தவனத்தை முறையாக பராமரிக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

அங்கே கண்காணிப்பை முடித்துக் கொண்டு கோட்டைமாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு, கடந்த ஆறு ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். தாமதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கோட்டைமாரியம்மன் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 9 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன.  பக்தர்களிடமிருந்து காணிக்கையகப் பெறப்பட்டுள்ள தங்க நகைகளை உருக்கித் தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைப்பதன் மூலம் ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். 

வைப்புநிதிக்காக வைக்கப்படும் தங்க பிஸ்கட்டுகளுக்கு, 2.5% வட்டி விகிதம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இதன் மூலமாகப் பெறப்படும் தொகை கோயில்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதனை உடனடியாக மேற்கொள்ள தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள் உள்ள தங்க நகைகளை மும்பையில் உள்ள இந்திய அரசின் அனுமதி பெற்ற ஆலையில் உருக்க திட்டமிட்டுள்ளது.  

தொழில்நுட்பக் குழுவில் நகை மதிப்பீட்டாளர்கள், இணை ஆணையர்கள் அடங்கிய குழுவாக இது அமையும். இந்தக் குழு வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றும்" என்று தெரிவித்தார்.

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்:

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

அதேபோல், கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் தற்காலிகப் பணியாளர்களாகப் பணொயாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சருடன் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Embed widget