மேலும் அறிய

Watch video: 23,000 ருத்ராட்ச மணிகளில் சிவன் சிற்பம்.. உலக அமைதிக்காக மஹா சிவராத்திரி நாள் பிரார்த்தனை..!

பிரபல மணல் கலைஞர் 23,000 ருத்ராட்ச மணிகளைக் கொண்டு சிவன் சிற்பத்தை உருவாக்கினார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஒடிசா மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 23,000 ருத்ராட்ச மணிகளைக் கொண்டு சிவபெருமானின் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இன்று நாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி என்றால் ‘சிவபெருமானின் சிறந்த இரவு’ என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.

இந்த நிலையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஒடிசா மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 23,436 ருத்ராட்ச மணிகளைக் கொண்டு சிவபெருமானின் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 6 மணி நேரத்தில் பூரி கடற்கரையில் இந்த சிற்பம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட சிவன் சிற்பம் நேற்று அமைக்கப்பட்டது. உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உலக அமைதிக்காக சிவபெருமானை பிரார்த்திக்கிறோம் என்று சுதர்சன் பட்நாயக் கூறினார்.

மாதந்தோறும் சிவராத்திரி விரதம்(shivaratri vratham) மேற்கொள்வது மிகப்பெரிய புண்ணியம். நம்முடைய பாவங்களெல்லாம் காணாமல் போகும். அப்படி மாதந்தோறும் விரதம் இருக்க இயலாதவர்கள், மாசியில் வரும் மகாசிவராத்திரி(mahashivratri) நாளில் விரதம் இருந்தால் தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நீங்கும். கர்மவினைகள் அகன்று புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

ஈஷா பெருவிழா

கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா (இன்று) மார்ச் 1-ஆம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இன்றிரவு விடிய விடிய சிவனுக்கு ஆராதனை செய்யப்பட்டு, இசை சங்கமம் முழுங்க பெரிய விழாவாக கொண்டாட இருக்கின்றனர். இந்த நாளில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு உற்சாகத்தினை அளிக்க இருக்கின்றனர். 

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக கலக்கிவரும் ஷேன் ரோல்டன் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார். அதேபோல், தெலுங்கு பாடகி  மங்கலி, பாலிவுட் திரை உலகில் பல பக்தி பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர் மாஸ்டர் சலீமும் இவ்விழாவில் பாட உள்ளார். 

தொடர்ந்து, அசாமின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் பப்பான், ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்சியும் பங்கேற்க இருக்கின்றனர். 

இவ்வாறு, தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் என பல மாநில கலைஞர்களுடன் ஈஷா மஹாசிவராத்திரி விழா களைகட்ட உள்ளது. இவ்விழா கோவை ஈஷாவில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.  சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் மஹாசிவராத்திரி அன்று மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்திருப்பதற்காக  இத்தகைய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரியின் நேரலை  உலக அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவையே முந்தி அதிக பார்வைகளை பெற்று உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஈஷா மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை தமிழ் மொழியில் காண, ABP நாடு யூடியூப் சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட இருக்கிறது. மக்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக இருந்தப்படியே நேரலையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget