(Source: ECI/ABP News/ABP Majha)
Isha Mahashivratri 2024: ஈஷா யோகா மையத்தில் விடிய விடிய நடக்கும் சிவதாண்டவத்தை லைவ்வாக பார்க்கனுமா?
மகா சிவராத்திரி என்றாலே சிவ பக்தர்கள் அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவனை வணங்கி, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என பிராத்னை செய்வார்கள்.
மகா சிவராத்திரி என்றாலே சிவ பக்தர்கள் அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவனை வணங்கி, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என பிராத்னை செய்வார்கள். பல பக்தர்கள் தங்களது இல்லத்திலேயே விழித்திருப்பார்கள். பல பக்தர்கள் சிவாலயங்களுக்குச் செல்வார்கள். தமிழ்நாட்டில் இது மட்டும் இல்லாமல் கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பக்தர்கள் பெரும்பான்மையானவர்கள் குவிந்து சிவராத்திரி தினத்தில் கூட்டு பிராத்னையில் ஈடுபடுவார்கள். சிவாலயங்களில் நடைபெறும் பிராத்னைகளைப் போலவே இந்த பிராத்னையும் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த கூட்டுப் பிராத்னைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விவிஐபிகள், பொதுமக்கள் என அனைத்து வகை சிவபக்தர்களும் கலந்து கொள்வார்கள். ஈஷா யோகா மையத்திற்கு செல்ல முடியாதவர்கள் அங்கு நடக்கும் கூட்டு வழிப்பாட்டினை காணவேண்டும் என நினைப்பார்கள். அப்படியான பக்தர்களின் ஆவலை போக்க நமது ஏபிபி நாடு வலைதள பக்கத்தில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் கூட்டு பிராத்னையை நேரலையாக ஒளிபரப்புகின்றோம். இதற்கான லிங்க் இந்த கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்ஷத்தில் இந்த சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் இதே திதி பிரசித்தி பெற்றது. மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.
இந்துக்களின் புராணங்களின்படி மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றுகிறார். அது முதன்முதலில் ஒரு மகா சிவராத்திரி நாளில் தான் நிகழ்ந்தது. விஷ்ணுவும், பிரம்மனும் தான் அந்த சிவராத்திரி நாளில் லிங்க வடிவில் சிவனை முதன்முதலில் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. மாத சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளும் நபர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்று புராண கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
நான்கு கால பூஜைகள்:
மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. மன அமைதிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்தால் பல நன்மைகளும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சென்று பூஜைகளில் பங்கேற்க முடியாவதவர் வீடுகளிலேயே சிறப்பு பூஜைகள் செய்யலாம்.
சிவராத்திரி விரத முறை
சிவாராத்திரியன்று விரதம் இருக்க முடிவு செய்பவர்கள், விரத முறைகளை நெறியோடு பின்பற்ற வேண்டும். மகா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்துவிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிக்க வேண்டும். சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கு போட வேண்டும். பழங்கள், இனிப்புகளை சிவபெருமானுக்கு படையலாக இடலாம். சிவன் சாலிஸம் படிக்க வேண்டும்.
அன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். கோதுமை மாவு பயன்படுத்தி செய்த உணவுகள், கோதுமை ரவை உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு சேர்க்க கூடாது என்று சொல்லப்படுகிறது.
சிவராத்திரியன்று இரவில் ஓம் நமசிவாய என சிவன் நாமத்தை சொல்லி சிவனை பூஜிப்பபவர்கள் மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா நோயும் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஒரு சில சிவாலங்களில் சிவராத்தியன்று இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அதில் பங்கேற்று சிவனை தியானிக்கலாம். வீடுகளில் பூஜை செய்பவர்கள் வீடுகளிலேயே தேவாரம் திருவாச பாடல்களை படிக்கலாம். வீட்டை நன்கு சுத்தம் செய்து பூஜை, வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.