![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Astrology | ஆதிக்கம் செய்யும் கிரகங்கள் பலன் அளிக்கவில்லையா? அரசமரத்தை ஏன் வழிபடவேண்டும்?
உங்களுடைய ஜாதகத்தில் ஆதிக்க கிரகம் சரியாக இல்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
![Astrology | ஆதிக்கம் செய்யும் கிரகங்கள் பலன் அளிக்கவில்லையா? அரசமரத்தை ஏன் வழிபடவேண்டும்? If your ruling planet is weak, worship Peepal tree- find out the reason behind that Astrology | ஆதிக்கம் செய்யும் கிரகங்கள் பலன் அளிக்கவில்லையா? அரசமரத்தை ஏன் வழிபடவேண்டும்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/15fdecb1d67fb36da81fa1d81aefafda_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொதுவாக மரங்களில் மிகவும் முக்கியமான மரம் அரச மரம். இந்த மரத்திற்கு பல முக்கியத்துவம் உண்டு. இந்துக்களின் சனாதன தர்மத்தின் படி மரங்களுக்கு எல்லாம் தெய்வமாக இந்த அரச மரம் விளங்குகிறது என நம்பப்படுகிறது. மேலும் இந்த மரத்தின் ஒவ்வொரு இலைகளிலும் கடவுள் வசிப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இந்த மரத்தில் விஷ்ணு மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு தெய்வங்களும் அமர்ந்து இருப்பார்கள் என்று சில கூறுவது வழக்கம். ஆகவே இந்த மரத்தை வழிப்பட்டால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிலும் குறிப்பாக ஜாதகத்தில் சில தோஷம் உள்ளவர்கள் இந்த அரச மரத்தை வேண்டினால் அவர்களுக்கு சில நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி அரச மரத்தை வேண்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
- ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் அரச மரத்தின் மீது தண்ணீர் வைத்து அபிஷேகம் செய்தால் நம்முடைய ஜாதகத்தில் உள்ள பலவீனமாக கிரகங்கள் பலம் அடையும் என்று நம்பப்படுகிறது.
- மேலும் கால ஸர்ப தோஷம் உள்ள நபர்கள் இந்த அரச மரத்தை சுற்றி வரும் போது அவர்களுக்கு அதிலிருந்து நிவர்த்தி அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கூறப்படுகிறது.
- அரச மரத்தை தொட்டுக் கொண்டு 108 முறை ஓம் நமச்சிவாய என்று சொல்லி வேண்டினால் ஜாதகத்திலுள்ள கிரகம் நிலைகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
- அதேபோல் ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்தால் அவர் அரச மரம் நட்டால் அந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என நம்பப்படுகிறது.
- சனி பகவான் மூலம் தொல்லை அனுபவிக்கும் ஜாதக நபர்கள் சனிக்கிழமை தோறும் வெல்லம் கலந்த பாலை அரச மரத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அத்துடன் சனிக்கிழமை தோறும் அவர்கள் கடுகு எண்ணெய் வைத்து விளக்கு போட வேண்டும் என நம்பப்படுகிறது.
- சனி பகவானின் தாக்கம் குறைய வேண்டும் என்று விரும்பும் நபர்கள் 11 அரச மர இலையை பறித்து அதில் ஜெய் ஶ்ரீராம் என்று எழுதி மாலையாக செய்ய வேண்டும். அந்த மாலையை ஹனுமானுக்கு இட்டு வழிபட்டால் சனி பகவான் தாக்கம் அவர்களுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது என்பது ஐதீகமாக உள்ளது.
- அரச மரத்தை சூர்ய உதயத்திற்கு முன்பாக வழிபட கூடாது. அதேபோல் ஞாயிற்றுகிழமை அரச மரத்தை நிச்சயம் வழிபட கூடாது எனவும் ஐதிகம் உள்ளது
இவ்வாறு அரச மரத்தை வழிப்பட்டால் நமக்கு சில நன்மைகள் உண்டாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)