Palani Temple: பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்...!
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி கோயில். உலகப் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம்.
அப்போ கமலுக்கு 3 வயசு இருக்கும்.. மேடையில் நினைவுகளை பகிர்ந்த நடிகர் சிவாஜி!
கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்து வந்தது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும் இருந்து வரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரபல மலையாள நடிகர் தற்கொலை.. தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு.!
அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவாமல் இருக்க பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Maya S krishnan: நிறைய மீம்ஸ்.. மக்களின் அன்பு.. விக்ரம் படத்தில் அந்த ரோல் குறித்து மனம் திறந்த மாயா!
மலைக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து உள்ளார்களா என கோயில் ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் இலவசமாக முகக் கவசம் வழங்கப்பட்ட பின்பு வழிபாட்டிற்காக மலைமீது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பக்தர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அறநிலையத்துறை சார்பில் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்