உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த வயலூர் கூட்டு சாலைக்கு அருகில் உள்ள உள்ளம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூதேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது, ’’எங்களது கள ஆய்வில் கிடைத்துள்ள இச்சிலையானது ஒன்றரை அடி மட்டுமே வெளியில் தென்படுகிறது எஞ்சிய இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி பூமியில் புதைந்த நிலையில் காணப்படுகிறது.இது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தைச் சார்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை ஆகும். இதை அப்பகுதி மக்கள் எல்லை காத்தாள் என்கிறார்கள்.

மூத்த தேவியின் தலையில் கரண்ட மகுடத்துடனும் கழுத்தில் அணிகலன்களும் தோள்பட்டைகளில் வாகு வளையங்களும் கைகளில் காப்பும் காணப்படுகிறது. அவரின் வலப்பக்கம்  மாட்டுத்தலை கொண்ட அவரதுமகன் மாந்தனும் இடப்பக்கம் அவளது மகளான மாந்தியும் காணப்படுகிறார்கள் மகளின் தலைக்குமேலே காக்கை சின்னம் உள்ளது இது அவரின் சின்னமாகும்..

உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

மூத்த தேவிக்கு தவ்வை ஜேஷ்டாதேவி என பெயர்களுண்டு இவர் திருமாலின் மனைவியான  லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர் அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.பல்லவர் காலத்தில்  வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்தவர் இதனால் பல்லவர்கால ஆலயங்களில் வீற்றிருப்பார் சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்ததெய்வம் வளமையின் அடையாளமாக போற்றப்பட்டவர் பின்பு மூதேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது பழம் பெருமையையும்.

உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

கடந்தகால வரலாற்றையும் பறைசாற்றும் இந்த சிலையை தமிழகத் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி அதை மண்ணில் இருந்து முழுமையாக எடுத்து உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாகும் என தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க உத்தரமேரூரில் தொடர்ந்து பல்வேறு தொல்லியல் சார்ந்த பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட உத்தரமேரூர் அருகே உள்ள சிவன் கோவிலில் தங்க புதையல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags: kancheepuram kovil news

தொடர்புடைய செய்திகள்

கரூர்:  ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா?

கரூர்: ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா?

கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?

கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?

கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

தமிழ்நாட்டில் கோயில்களையும் சிலைகளையும் பாதுகாக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கோயில்களையும் சிலைகளையும் பாதுகாக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா

வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : அனைத்து மாவட்டங்களிலும் சரிந்த கொரோனா தொற்று!

Tamil Nadu Coronavirus LIVE News : அனைத்து மாவட்டங்களிலும் சரிந்த கொரோனா தொற்று!

Mumbai Rain: மும்பையில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 11 பேர் பலி

Mumbai Rain: மும்பையில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 11 பேர் பலி

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!