மேலும் அறிய

Chandrashtama: அடிதடியில் சென்று முடியும் சந்திராஷ்டமம் தினம்? தப்பிக்க பரிகாரம்தான் என்ன?

சந்திராஷ்டம தினத்தில் வீண் வாதங்களில் ஈடுபட்டால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்று ஜோதிடத்தில் எச்சரிக்கப்படுகிறது.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

அன்பார்ந்த வாசகர்களே, நீங்கள்  12 ராசிகளில் எந்த ராசியில் வேண்டுமென்றாலும் பிறந்தவராக இருக்கலாம் . 12 ராசிகளை  உங்கள் பார்வைக்கு சற்று  குறிப்பிடுகிறேன். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்,  சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம்.  இப்படி பன்னிரண்டு ராசிகளில் உங்களுடைய ராசிக்கு  எட்டாவது ராசியில் சந்திரன் பிரவேசிக்கும் காலம்  சந்திராஷ்டமம் எனப்படும்.

எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்?

உதாரணத்திற்கு, நீங்கள் மேஷ ராசி என்று வைத்துக் கொண்டால்  துலாம் ராசியில் சந்திரன் போய்க் கொண்டிருக்கும் காலத்தில் உங்களுக்கு சந்திராஷ்டமம் நடைபெறும்.  ரிஷப ராசி என்று வைத்துக் கொண்டால் தனுசுவில் சந்திரன் போய்க் கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் நடைபெறும்.  மிதுன ராசி என்று வைத்துக் கொண்டால் மகர ராசியில் சந்திரன் போய்க்கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.  கடக ராசி என்று வைத்துக் கொண்டால் கும்ப ராசியில் சந்திரன் போய்க்கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.  சிம்மராசி என்று வைத்துக் கொண்டால் மீன ராசியில் சந்திரன் போய்க்கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.  கன்னி ராசி என்று வைத்துக் கொண்டால் மேஷ ராசியில் சந்திரன் போய் கொண்டு இருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும். 

துலாம் ராசி என்று வைத்துக்கொண்டால் ரிஷப ராசியை சந்திரன் போய்க்கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.  விருச்சிக ராசி என்று வைத்துக் கொண்டால்  மிதுன ராசியில் சந்திரன் போய்க்கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும் .  தனுசு ராசி என்று வைத்துக் கொண்டால்  கடக ராசியில் சந்திரன் போய்க்கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.  மகர ராசி என்று வைத்துக் கொண்டால்  சிம்ம ராசியில் சந்திரன் போய்க்கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.  கும்ப ராசி என்று வைத்துக் கொண்டால்  கன்னியில் சந்திரன் போய்க் கொண்டிருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.  மீன ராசி இன்று வைத்துக் கொண்டால்  துலாம் ராசியை சந்திரன் போய் கொண்டு இருக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.

மேலே சொன்ன ராசிகளுக்கு சந்திராஷ்டமும் எப்போது வரும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்  சந்திராஷ்டமம் சரியாக  இரண்டு நாட்களுக்கு  உங்களுக்கு வேலை செய்யும்.

சந்திராஷ்டம தினத்தில் எதை செய்யக்கூடாது?

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் வரும் நேரத்தில் நீங்கள் பெரும்பாலான சுப காரியம் நிகழ்வுகளை தவிர்த்து விட வேண்டும்.  குறிப்பாக வேலை விஷயமாக நீங்கள் முதன் முதலில் இன்டர்வியூ செல்கிறீர்கள் என்றால்  அந்த தினம் உங்களுக்கு சந்திராஷ்டமமாக இருக்கக் கூடாது.  சுப காரிய நிகழ்வுகளான பெண் பார்த்தல் சுத்தமாக கூடாது.  ஒருவேளை உங்களுடைய சந்திராஷ்டம தினத்தில் நீங்கள் பெண் பார்க்க சென்றால் உங்களுடைய வாழ்க்கை முழுவதுமே  கஷ்டப்பட வேண்டியதாய் அமையும். 

முதன்முதலில் யாரேனும் பெரியவர்களை சந்திக்கிறீர்கள் என்றால் அந்த காலகட்டத்திலும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது.  வீடு கட்டுதல்  புது மனை வாங்குதல் போன்ற  சொத்துக்களை வாங்கும் போதும் அன்றைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டமமாக இருக்கக் கூடாது.  மாதத்திற்கு ஒரு முறை சந்திராஷ்டமம் கண்டிப்பாக வந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் பெரும்பாலும் நீங்கள் வெளியில் சென்று புது நபர்களை சந்திப்பதை தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே பழகியவர்களிடம் அளவாக பேசுங்கள்.

வம்பு இழுக்க வைக்கும் சந்திராஷ்டமம்:

உங்களுக்கு சந்திராஷ்டமம் போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக எப்பொழுதும் போல் பேசுகின்ற ஒரு பேச்சு நிச்சயமாக அந்த சந்தையில் கொண்டு போய் முடிய வைக்கின்ற அளவுக்கு தீவிரமாக.  எடுத்துக்காட்டு இரு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சந்திராஷ்டமம் இருக்கும் நபர் ஒருவர் நண்பரிடம் சாதாரணமாக ஒரு வார்த்தை பேச அதை நண்பர் வித்தியாசமாக எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டு பின்பு அது மிகப்பெரிய நண்பர்களுக்கும் விழாவாகவே முடியும்.  உங்களுடைய வாழ்க்கையில் பெரிய பெரிய சண்டைகள் வந்த தினத்தை கவனித்து பாருங்கள்.

அன்று உங்களுக்கு பெரும்பாலும் சந்திராஷ்டமமாகத்தான் இருக்கும்.  அப்படி என்றால் சண்டைக்கு செல்லும்போது சந்திராஷ்டம தினத்தில் செல்லலாமா? என்று சிலர் குதர்க்கமாக கேள்விகளை கேட்கலாம்.  அதற்கு பதில் சொல்லக்கூடாது சந்திராஷ்டமத்தில் நீங்கள் சண்டைக்கு சென்றால் சண்டே பெரிதாகி உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர வெற்றியை தராது.  சந்திராஷ்டமத்தில் அடுத்தவரை உங்களிடம் சண்டைக்கு கூப்பிடும்.  நீங்கள் ஒருவேளை புத்திசாலித்தனமாக சந்திராஷ்டமதனத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கலாம் என்று முடிவெடுத்தால் கூட  உங்களுடைய உயர் அதிகாரி போன் போட்டு உங்களைத் திட்டுவார்.  இப்படி சந்திராஷ்டமத்தில் சும்மா இருந்தாலும் தப்பு, வேலை செய்தாலும் தப்பு  என்ற நிலைமை தான்.  அப்படி என்றால் சந்திராஷ்டம தினத்தை எப்படி நடக்க வேண்டும்.  அமைதியாக எதுவுமே செய்யாமல் யார் என்ன கூறினாலும் அதற்கு அதிகப்படியான பதில்கள் கூறாமல் ஆம் இல்லை என்ற மனதோடு செல்ல வேண்டும்.

சந்திராஷ்டமத்திற்கு பரிகாரம்:

உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கும் தினத்தில் ஒரு கிளாஸ் டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்  பின்பு அதில் மூன்று சிட்டிகை அளவுக்கு உப்பை கலக்கி  நன்றாக உப்பு தண்ணீரை குடியுங்கள்.  இப்படி சந்திராஷ்டம தினத்தில் உப்பு தண்ணீரை குடித்து வருவதன் மூலம், உங்களுக்குள் இருக்கின்ற எதிர்மறையான சக்திகள் வெளியேறிவிடும். 

நான் உப்பு தண்ணீர் கரைச்சலில் குடித்து விட்டேன். இப்போது யாரிடம் வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள்.  உங்களின் எதிர்மறையான சிந்தனைகளை அடக்குமே தவிர, எதிரி இருப்பவர்கள் சிந்தனையை அடக்காது.  எனவே நீங்கள் கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்ற  அமைப்பில் வாழ்க்கையை அப்படியே சென்று கொண்டிருக்கும்.  எனவே வருகின்ற சந்திராஷ்டம தினத்தை உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய காலண்டர் மூலம் தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருங்கள்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget