Baba Vanga: 2026 இன்னும் மோசமாக இருக்கும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாபா வங்கா!
2026 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்கள் முதல் வெள்ளம் வரை இருக்கும். இது மிகப்பெரிய அளவில் அழிவை உண்டாக்க்கும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு பிறக்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் 2025ம் ஆண்டு போல இல்லாமல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.
இப்படியான நிலையில் உள்ளூர் ஜோதிடர் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள எதிர்காலத்தை கணிப்பவர்கள் வரை அந்த ஆண்டு எப்படி இருக்கும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் மக்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா தனது எதிர்கால கணிப்புகளுக்காக புகழ் பெற்றவர். இவர் பார்வையற்றவராக இருந்தபோதிலும் எதிர்காலத்தில் எந்த நேரத்தில் என்னென்ன நடக்கும் என கணித்தது பலவும் நடந்துள்ளதால் பலரும் அவரின் கருத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வருகின்றனர். பாபா வாங்கா 1996ம் ஆண்டு இறந்த நிலையில் அவரின் மரணத்திற்கு பிறகு அவரின் கணிப்புகள் இன்றளவும் மக்களிடையே பேசுபொருளாக உள்ளது.
2026ம் ஆண்டு பற்றி பாபா வங்கா கணிப்புகள்
2026 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் சில கணிப்புகளை பார்க்கையில் இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அதாவது அந்த ஆண்டில் வேற்று கிரகவாசிகள் உடனான தொடர்பு, பேரழிவு தரும் இயற்கை பாதிப்புகள் மற்றும் உலகளவில் நாடுகளுக்கிடையேயான மோதல்கள் ஆகியவை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்கள் முதல் வெள்ளம் வரை இருக்கும். இது மிகப்பெரிய அளவில் அழிவை உண்டாக்க்கும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புது ஆண்டில் மக்களிடையே வன்முறை, எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல கவலைக்குரிய விஷயங்களை உலகம் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பாபா வங்கா தெரிவித்துள்ள இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதை ஒரு கணிப்பாக அல்லாமல் ஒரு எச்சரிக்கையாக மக்கள் பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
உலகளவில் பார்க்கும்போது அமெரிக்கா - ரஷ்யா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடையும் என்றும், இதனால் பிற நாடுகள் அதிகளவில் பாதிப்படையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களும் உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் செயற்கைப் பொருட்கள் பூமிக்கு அருகில் வரக்கூடும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
(ஆன்மிக நம்பிக்கையின்படி பாபா வங்கா கணித்துள்ளதாக சொல்லப்படும் தகவல்கள் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ளது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)





















