இந்த ராசிக்காரர்களுக்கு முத்துக்கள் ஆகவே ஆகாது.. ஜோதிடம் என்ன சொல்கிறது?
முத்து என்பது சந்திரனின் காரகம் என்பதால், சந்திரதேவருக்கு விரோதமான ராசி உள்ளவர்கள் முத்து அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பல ரத்தினக் கற்களை ஒன்றாகக் கலந்து அணியக் கூடாது.
முத்துக்களை அணிவது மங்களரமானதாக கருத்தப்பட்டாலும், ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ராசிகளுக்காரர்கள் முத்துக்களை அணியக்கூடாது என ஜோதிடம் கூறுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் எத்தகைய செயல்களைத் தொடங்கினாலும் அவர்கள் ஜோதிடத்தைத் தான் முதலில் பார்க்கிறார்கள். இதோடு வைரம், முத்து போன்ற நவரத்தினங்களை அணிவது தனக்கு நல்லதா? அணியலாமா? என்பது குறித்து எல்லாம் ஜோதிடத்தின் மூலம் மக்கள் அறிந்துக்கொள்வார்கள். அந்த வரிசையில் முத்துக்களை யாரெல்லாம் அணியலாம்? யாரெல்லாம் அணியக்கூடாது என ஜோதிடம் சொல்வது குறித்து இன்றைக்கு நாம் அறிந்துக்கொள்வோம்.
பொதுவாக ஜோதிடத்தில் முத்துக்களை அணிவது மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது. இதோடு மன அமைதியையும் , மன அழுத்தத்தையும் நீக்குவதாக நம்பப்படுகிறது. ஆனால் இவற்றை அனைவரும் அணியலாமா? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, முத்து கல் சந்திரனின் காரணி என்று கூறப்படுகிறது. எனவே முத்துக்கற்களை அணிபவருக்கு லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் நம்பப்படுகிறது. இதோடு ஒருவரின் முன்னேற்றத்திற்கும், மன அமைதி மற்றும் மன அழுத்தத்தை நீக்கவதற்கும் முத்துக்கற்கள் உதவியாக உள்ளது. மேலும் நேர்மறை எண்ணங்களை நாம் இதன் பெற முடியும் என்றாலும், சில சமயங்களில் ஜாதகத்தைப்பார்க்காமல் அணிந்தால் எதிர்மறையான விளைவுகளை நமக்கு ஏற்படுத்துகிறது.
எனவே முத்துக்களை அணிவதற்கு முன்னால் ஜோதிடத்தில் என்ன சொல்லப்படுகிறது? என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம்.
முத்து என்பது சந்திரனின் காரகம் என்பதால், சந்திரதேவருக்கு விரோதமான ராசி உள்ளவர்கள் முத்து அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பல ரத்தினக் கற்களை ஒன்றாகக் கலந்து அணியக் கூடாது. இது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
முத்துக்களை மஞ்சள் புஷ்பராகம் அல்லது பவளத்துடன் சேர்த்து அணிய வேண்டும். இது மக்களுக்கு சுப பலன்களை வழங்குகிறது. அதே சமயம் ஒருவர் வைரம், பன்னா, கோமேத், லெஹ்சூனியா அல்லது வைதுர்யா, நீலம் ஆகியவற்றை அணிந்திருந்தால், அவர்கள் அதை முத்துவுடன் இணைப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. மேலும் சந்திரனின் அசுப பலன்களைக் குறைக்க ஒரு முத்து அணியப்படுகிறது. சுக்கிரன், சனி, புதன் ஆகியோருடன் சந்திரன் பகைமையால், முத்துக்கள் தீங்கு விளைவிக்கும் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எந்தெந்த ராசிக்காரர்கள் முத்துக்களை அணியக்கூடாது?
முத்துக்கள் மங்களரமானதாக இருந்தாலும் புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகிய ராசிகளுக்கு அதிபதிகள் முத்து அணியக்கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது. அதாவது ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரரர்கள் முத்துக்களை அணியக்கூடாது. அப்படி அணியும் போது அவர்களின் மனம் சிதறி வாழ்வில் பாதிப்பு ஏற்படும் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் என நம்பப்படுகிறது. இதோடு தங்கள் ஜாதகத்தின் படி சந்திரன் 12 அல்லது 10 ஆவது இடத்தில் அமைந்திருப்பவர்களும் முத்துக்களை அணிவதற்கு அறிவுறுத்தப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.