தொடங்கிய தமிழ் புத்தாண்டு.. இன்றைய நாளுக்கான ராசிபலன்
இன்றைய நாளின் 12 ராசிகளுக்கான தின ஜோதிடப்பலன்களை ஜோதிட நிபுணர் கரு.கருப்பையா கணித்துள்ளார்.
ராசிகளும் அதன் பலன்களும்
மேஷம்:
பகை உணர்வு வருவது போல் தோன்றினாலும் பொறுமையை கையாளுங்கள், அனுசரித்து செல்லுங்கள். சிறப்பான முன்னேற்றம் காணலாம். மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்:
மனதிற்குள் நிம்மதி கூடும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நகைச்சுவை பேச்சும், சிந்தனை பேச்சு உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.
மிதுனம்:
பரிசு, பாராட்டுகள் பெறலாம். உங்கள் புகழ் ஓங்கும். இருந்தாலும் தற்புகழ்ச்சி, தற்பெருமை வேண்டாம். மனக்குழப்பங்கள் குறைய காத்திருக்கிறது.
கடகம்:
மறதி, அசதி ஏற்படும். சோம்பலை மாற்றிக்கொண்டு சுறுசுறுப்பாய் இருங்கள். உடல்நலம் சீராகும். அரசு வழியில் அனுகூலம் பெறலாம்.
சிம்மம்:
ஊக்கமும், ஆக்கமும் கூடும். தொழில் மற்றும் கலை ஆர்வம் சிறப்பாக அமையும். முன்வைத்த காலை பின்வைக்கமாட்டீர்கள். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். காலதாமதம் ஆனாலும், காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி:
மனநிம்மதி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார லாபம் சிறப்பாக இருக்கும். வங்கி சேமிப்பில் கவனம் செலுத்தவும்.
துலாம்:
ஆன்மிக சிந்தனைக்கூடும். எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக தேர்ச்சி பெறுவார்கள். திருமண வரங்கள் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்:
பொருள் வரவு கூடும். விடுபட்ட வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். பாதியில் நிறுத்தப்பட்ட கட்டட வேலைகளை தொடங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். தொந்தரவுகள் குறையும்.
தனுசு:
கோபப்பட வேண்டாம். பொறுமை காக்கவும். பெற்றோர் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பெண்களுடன் விழிப்பாக இருக்கவும். மருத்துவத்துறையில் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
மகரம்:
மனதில் பயம் ஏற்படலாம். கடன் தொல்லைகள் குறையும். புதிய கடன்கள் வாங்க வேண்டாம். பத்திரிகை துறையினர் சிறப்பான வாய்ப்புகளை பெறலாம்.
கும்பம்:
கீர்த்தி, புகழ், பாராட்டு, பெருமை கூடும். நல்ல வாய்ப்புகளை விட்டுவிடாதீர்கள். பொறுப்பாக செயல்படுங்கள். சிறிய லாபத்தால் பெரிய லாபம் கிடைக்க காத்திருக்கிறது. வாகனத்தில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்:
போட்டி, பொறாமை இருக்கும் சமாளித்துவிடுவீர்கள். வீண் விரயங்களை குறைத்து கொள்ளுங்கள். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். ஆன்மிக நாட்டம் கூடும்.