மேலும் அறிய

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !

,மதுரை உசிலம்பட்டி மக்கள் நலன்: வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 
58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி
 
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பெரிய செம்மேட்டுப்பட்டி கிராமம் அருகில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மற்றும் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கிராமங்களின் பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் 35 கண்மாய்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த ஆய்வின்போது, பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் பணிகளை விரைந்து, தரமாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
 
குடிநீர் வழங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
மேலும், அங்கன்வாடி மையத்தில் தேவையான மின்சார வசதிகளை உடனடியாக மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சியில் உள்ள காமராஜ் நகர் நியாய விலைக் கடையில்  பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உத்தப்பநநாயகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  உள்ள  பதிவு செய்யும் இடம், உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு (High Risk Pregnancy Mothers) வழங்கப்பட்டு வரும் சிறப்பு மருத்துவ கண்காணிப்பு, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்தும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசி பணிகள் குறித்து கேட்டறிந்து, உரிய காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.559.07 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உத்தப்பநாயக்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள நீர் உந்து நிலையத்தை பார்வையிட்டார். இத்திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, திருமங்கலம், வாடிப்பட்டி, செல்லம்பட்டி, அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 867 கிராம குடியிருப்புகளுக்கும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
நேரில் ஆய்வு
 
மேலும் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வருவாய் தொடர்பான சேவைகள், மனுக்கள் மீதான நடவடிக்கைகள், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் உசிலம்பட்டி நகராட்சி பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வது குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்து, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளித்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கி மையம், குழந்தைகள் துரித சிகிச்சைப் பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், சிகிச்சை வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி, நுண் உரம் செயலாக்க மையத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்து, நுண் உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உசிலம்பட்டி வட்டம், வடுகபட்டி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
.

Advertisement

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget