மேலும் அறிய

தஞ்சாவூர்: கற்பக விருட்சம் தென்னையில் அதிக மகசூல் எடுக்க வேளாண் துறையின் யோசனைகள்

கன்றுகள் நடுவது முதல் கண்காணித்தால் காய்க்கும் திறன் அதிகரிக்கும் என்றும், அதற்கு செய்ய வேண்டியவை குறித்து தஞ்சாவூர் வேளாண் துறை இணை இயக்குநர் அ.ஜஸ்டின் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தென்னந்தோப்புகளில் மகசூல் சரியில்லை என கவலைப்பட வேண்டாம். கன்றுகள் நடுவது முதல் கண்காணித்தால் காய்க்கும் திறன் அதிகரிக்கும் என்றும், அதற்கு செய்ய வேண்டியவை குறித்து தஞ்சாவூர் வேளாண் துறை இணை இயக்குநர் அ.ஜஸ்டின் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தென்னை ஒரு கற்பக விருட்சம். இதனுடைய அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாக உள்ளது. தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஆகும். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து பயன் தரக்கூடியது தென்னை மரம். விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது.

தஞ்சாவூர்: கற்பக விருட்சம் தென்னையில் அதிக மகசூல் எடுக்க வேளாண் துறையின் யோசனைகள்
தென்னையை குறிப்பிட்ட இடைவெளியில் நடுவதன் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி மாவு பொருள் தயார் செய்கிறது. சூரிய வெளிச்சம் கிடைக்காத போது பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடுகிறது. எனவே சரியான இடைவெளியில் தென்னை நாற்றுகளை நடவு செய்வது அவசியமாகிறது.

தென்னையில் நிலையான விளைச்சலைப் பெற 25×25 அடி இடைவெளியில் நட வேண்டும். வளர்ச்சி அடைந்த தென்னையின் வேர்பகுதி ஒரு கன மீட்டர் சுற்றளவு இருக்க வேண்டும். ஒரு கன மீட்டரில் சுமார் 7500 வேர்கள் உற்பத்தியாகிறது. எனவே 3×3×3 அடி குழிகள் தென்னங்கன்று நடுவதற்கு ஏற்றதாகும். இவ்வாறு நடப்படும் மரங்களில் பாளைகள் 45 மாதங்களில் வெளி வருகின்றன. மேலும் தண்டு பகுதி, அடி முதல் நுனி வரை சீராக காணப்படும். இவ்வாறு நடப்படும் மரங்கள் புயலினால் பாதிப்படையாமல் நன்கு வளரும் தன்மை கொண்டிருக்கும். இவ்வாறு நடவு செய்வதால் எக்டருக்கு 175 மரங்கள் சதுர முறையில் நட முடியும். வாய்க்கால் ஓரத்திலும், வரப்புகளிலும் ஒற்றை வரிசையாக நடவு செய்யும் போது 20 அடி இடைவெளியில் நட வேண்டும். முக்கோண முறையில் 22 அடி இடைவெளியில் குட்டை ரகங்களை எக்டேருக்கு 236 மரங்களும், 25 அடி இடைவெளியில் நடும் போது 205 மரங்களும் நடலாம்.

தஞ்சாவூர்: கற்பக விருட்சம் தென்னையில் அதிக மகசூல் எடுக்க வேளாண் துறையின் யோசனைகள்
குழிகளை தோண்டி நடவு செய்யும் முன் காய்ந்த சருகுகளை இட்டு எரிப்பதன் மூலம் பூச்சி, பூஞ்சாணம் நூற்புழுக்களின் தாக்குதலை தவிர்க்கலாம். குழியில் ஒரு அடி ஆழத்திற்கு மண்ணுடன் மக்கிய தொழுஉரத்தையும் கலந்து நிரப்ப வேண்டும். கன்றுகளில் உள்ள வேர்களை நீக்கி குழியில் கன்றின் தேங்காய் பகுதி பதியும்படி நட வேண்டும்.

கன்றுகள் புதிய வேர்கள் பிடிக்கும் வரை ஆடாமல் இருக்க நீண்ட குச்சிகளை ஊன்றி, கன்றை குச்சியில் கட்டி விட வேண்டும். நடப்பட்ட கன்று வெயிலில் வாடி வதங்காமல் இருக்க பனை, தென்னை ஓலைகளைக் கட்டி 3 மாதங்கள் வரை நிழல் கொடுக்க வேண்டும். குழியில் ஈரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னைக்கு மண் பரிசோதனைப்படி உரமிடுதல் மிகவும் சிறந்தது. முதல் ஆண்டில் தென்னையின் தூரிலிருந்து 60 செ.மீ தூரத்திலும் ஒவ்வொரு ஆண்டும் 30 செ.மீ கூடுதல் தூரத்தில் வட்ட பாத்திகளை அமைத்து உரத்தை பரவலாக இட்டு நன்கு கொத்தி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

தஞ்சாவூர்: கற்பக விருட்சம் தென்னையில் அதிக மகசூல் எடுக்க வேளாண் துறையின் யோசனைகள்
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தென்னந்தோப்பு கழிவுகள், ஆலை சாம்பல், சர்க்கரை ஆலை கழிவு போன்றவைகளை இட்டு மண் வளத்தை கூட்டலாம். 5 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு சுட்ட சுண்ணாம்பு-1 கிலோ, மக்னீசியம் சல்பேட் 500 கிராம், சாதா உப்பு 2 கிலோ வீதம் இட்டு கொத்தி விட்டு நீர் பாய்ச்சலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்தில் 250 காய்களுக்கு குறையாமல் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget