மேலும் அறிய

சிவகங்கை நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவு மர்மம்.. சாக்குகள், எடை இயந்திரங்கள் திருட்டு? வைரல் வீடியோ பரபரப்பு!

மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.

நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவு மர்ம நுழைவு – சாக்குகள், எடை மெஷின்கள் திருட்டு? வைரல் வீடியோ பரபரப்பு
 
அரசு நெல் கொள்முதல் நிலையம்
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பிசர் பட்டிணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாக்குகள் மற்றும் எடை மெஷின்களை தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விவசாய சீசனில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கொள்முதல் மையத்தில் நடந்ததாக தெரிவிக்கப்படும் அந்த வீடியோ வெளியாகியதை தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சிவகங்கை மண்டல மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ புகார் எங்களிடம் வரவில்லை. அலைபேசி மூலம் தகவல் கிடைத்ததையடுத்து ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், அந்த கொள்முதல் நிலையத்தைச் சுற்றி முன்பே பல புகார்கள் வந்ததாகவும் கூறினார்.
 
பிளாக் லிஸ்ட்
 
புகார்களின் அடிப்படையில் அங்கு பணிபுரிந்த பருவகால பட்டியல் எழுத்தர் தேன்மொழி மீது இரண்டு ஆண்டுகள் ‘பிளாக் லிஸ்ட்’ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மேற்பார்வையாளர் ராமமூர்த்திக்கு ‘ஷோக்காஸ் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சில நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சாக்கு மூட்டைகளை எடுத்துச் சென்று நேரடியாக வியாபாரிகள் கையிருப்பு வைத்துள்ள இடங்களில் தரச் சோதனை இல்லாமல் நெல் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல புகார் மனுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகள் குறைந்த விலையில் வியாபாரிகளிடம் நெல் விற்க வேண்டாம் என்பதற்காக அரசு நேரடி கொள்முதல் மையங்களை அமைத்துள்ள நிலையில், சில மையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை முறைகேடாக வசூலிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டும், விவசாயிகளிடமிருந்து கூடுதல் பணம் பெறப்படுவது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.
 
முழுமையான விசாரணை நடத்த வேண்டும்
 
மேலும், இந்த சம்பவம் குறித்து மேற்பார்வையாளர் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், இதுபோன்ற முறைகேடுகள் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால்தான் இத்தகைய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதாகவும் கூறப்படுகிறது. வீடியோ வெளியாகிய பிறகும் எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதேபோல், வியாபாரிகளிடமும் விதிமுறைகளை மீறி நெல் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 
திருட்டு சம்பவமா அல்லது திட்டமிட்ட முறைகேடா?
 
வைரலாகி வரும் இந்த வீடியோ உண்மையில் அதே கொள்முதல் நிலையத்தில் எடுக்கப்பட்டதா? இது திருட்டு சம்பவமா அல்லது திட்டமிட்ட முறைகேடா? என்பதனை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டம் முழுவதும் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
Embed widget