மேலும் அறிய

கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்

னவெளி கிராமத்தில் நன்கு வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களைக் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் வந்து சேதப்படுத்தி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பனவெளியில் சாகுபடி பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் சாகுபடி பணிகளை மேற்ொண்டு நன்கு வளர்ந்து வரும் நிலையில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்துள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகளில் நிலவும் தற்போதைய சூழல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு உலுக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சாவூர் அருகே உள்ள பனவெளி கிராமத்தில் நன்கு வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களைக் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் வந்து சேதப்படுத்தி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

நீராதாரப் பற்றாக்குறை என்பது விவசாயிகள்  நெல்லை விதைக்கும் பருவத்திலேயே தொடங்கிவிடுகின்றன.  மழை பொய்த்துப் போவது, ஆற்று நீர் சரிவர வரப்பெறாதது மற்றும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோனது போன்ற காரணங்களால், பயிர்களுக்குத் தேவையான தண்ணீரைப் பாய்ச்சுவதற்கே விவசாயிகள் சொல்லொணாத் துயரங்களைச் சந்திக்கின்றனர்.

கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் டீசல் என்ஜின்கள் மற்றும் மோட்டார்களைக் கொண்டு சிரமப்பட்டுத் தண்ணீரை இறைத்து, தங்களின் பயிர்களைக் குழந்தைகள் போலப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். பயிர் நன்றாக வளர்ந்து, பால் பிடிக்கும் பருவத்தை எட்டும் வரை தண்ணீரின்றி ஒவ்வொரு சொட்டு நீருக்கும் போராடும் நிலை நிலவுகிறது.

தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கடந்து, பயிர்கள் செழித்து வளர்ந்து வரும் நிலையில், அடுத்த பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது காட்டுப்பன்றிகளின் அச்சுறுத்தல். தஞ்சாவூர் மாவட்டம் பனவெளி கிராமத்தைச் சுற்றியுள்ள புதர் மற்றும் காட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில் நெல் வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன.

இவை நெற்பயிர்களைத் தின்பதோடு மட்டுமன்றி, வயல்களில் உருண்டு புறண்டு, நன்கு வளர்ந்த பயிர்களை மிதித்துச் சாப்பிடுகின்றன. வேர்களைத் தோண்டி எடுப்பதால், பயிர்கள் மீண்டும் நிமிர்ந்து வளர முடியாதபடி முற்றிலும் அழுகிப் போகின்றன.

நன்னு வளர்ந்து வந்த பயிர்கள் இவ்வாறு காட்டுப்பன்றிகளால் பாழ்படுத்தப்பட்டு வருவது விவசாயிகளுக்கு ொருளாதார பின்னடைவை ஏற்படுத்துகிறது. கண்முன்னே விளைச்சல் நிலம் பாழாய்ப் போவதைக் கண்டு விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு உழவு, விதை, உரம், ஆட்களுக்கான கூலி, பூச்சிக்கொல்லி மற்றும் பாசனச் செலவு என பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை விவசாயிகள் முதலீடு செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் வங்கிக் கடன்கள் மூலமாகவும், வட்டிக்குக் கடன் வாங்கியுமே விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

காட்டுப்பன்றிகள் பயிர்களைச் சேதப்படுத்துவதால், போட்ட முதலீட்டைக் கூட திரும்ப எடுக்க முடியாத சூழல் உருவாகிறது. விளைச்சல் முற்றிலும் பாழாவதால், வாங்கிய கடனைத் திருப்பிக் செலுத்த முடியாமல் விவசாயிகள் கடுமையான கடன் சுமைக்குத் தள்ளப்படுகின்றனர். அடுத்த பருவத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் குடும்பப் பராமரிப்பிற்கான வருமானம் இல்லாமல் பொருளாதார ரீதியாக முற்றிலும் முடங்கிப்போகின்றனர்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பனவெளி கிராம விவசாயிகளுக்கு அரசின் உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது. வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவற்றை வயல்வெளிகளுக்குள் வராமல் தடுக்கவும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களைப் பாதுகாக்க சூரிய ஒளி மின்வேலிகள் (Solar Fencing) அமைக்க மானியம் மற்றும் நிதியுதவிகளை உயர்த்த வேண்டும்.

இயற்கைச் சீற்றங்கள், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியவற்றைத் தாண்டி, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இந்தச் சேதம் விவசாயிகளின் நம்பிக்கையை அடியோடு தகர்த்து வருகிறது. அரசு உடனடியாக தலையிட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் மட்டுமே, பனவெளி கிராம விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

2 தொகுதியையும் தட்டி தூக்கனும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
2 தொகுதியையும் தட்டி தூக்கனும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
அரசுப் பணத்தில் ஸ்டாலின் குடும்பமே சொகுசு சுற்றுலா.. நீங்க பேசலாமா?.. திமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
அரசுப் பணத்தில் ஸ்டாலின் குடும்பமே சொகுசு சுற்றுலா.. நீங்க பேசலாமா?.. திமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
ஆரோவில் இனி நாடு முழுவதும்! ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய ‘ஆரோவில் தகவல் சேவை’ – டாக்டர் ஜெயந்தி ரவி அறிவிப்பு
ஆரோவில் இனி நாடு முழுவதும்! ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய ‘ஆரோவில் தகவல் சேவை’ – டாக்டர் ஜெயந்தி ரவி அறிவிப்பு
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2 தொகுதியையும் தட்டி தூக்கனும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
2 தொகுதியையும் தட்டி தூக்கனும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
DMK Vs Udhay: அடுத்தடுத்து என்ட்ரி தந்த உதய், நிர்மல்குமார் - தவெக, திமுக கோஷங்களால் அதிர்ந்த ஏர்போர்ட்
அடுத்தடுத்து என்ட்ரி தந்த உதய், நிர்மல்குமார் - தவெக, திமுக கோஷங்களால் அதிர்ந்த ஏர்போர்ட்
India Nukes: அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
MadhuraMangalam Sipcot: ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
Embed widget