மேலும் அறிய

நெல்லின் ஈரப்பதம்: மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது - நாகை விவசாயிகள்

பருவம் தவறிய கனமழையின் காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.

20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என்ற மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக நாகை கடைமடை விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் மழைநீரில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது. 

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் 41 ஆயிரம் ஏக்கர், உளுந்து 1600 ஏக்கர் , நிலக்கடலை 1200 ஏக்கர்  மழைநீரால் சூழப்பட்டதாக வேளாண் துறையினர் எடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இதேபோல் திருவாரூரில் நெற்பயிர்கள் 27 ஆயிரம் ஏக்கர், 18 ஆயிரம் ஏக்கர் உளுந்து , கடலை 2,170 ஏக்கர் சேதமடைந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நாகையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 35 ஆயிரம் ஏக்கர் நெர்பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கர் உளுந்து மழையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

நெல்லின் ஈரப்பதம்: மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது - நாகை விவசாயிகள்

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, வேளாண் துறை செயலாளர், மூத்த அதிகாரிகள் குழு நேற்று பயிர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இந்த குழு அறிக்கை சமர்பித்ததை தொடந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.

நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மத்திய அரசுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பத அளவை 17ல் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதினார். 

இதன்பின்னர் மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் நெல்லுக்கான ஈரப்பத அளவை 19%-ல் இருந்து 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என்ற மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக நாகை கடைமடை விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அறுவடை முடிந்த பிறகு 15 நாட்கள் தாமதமாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ள விவசாயிகள், எந்த பலனும் இல்லாத இந்த அறிவிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget