Gold Rate: அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
Gold Rate: இனி தங்கத்தை கனவில் தான் வாங்க வேண்டும் என்பதுபோல் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு உயர்ந்துவரும் தங்கம் விலை, தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சிலருக்கு தங்கம் வாங்குவது ஒரு கனவாக இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமையோ, கனவில் தான் தங்கம் வாங்க முடியும் என்று ஆகிவிட்டது. அந்த அளவிற்கு புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டுள்ளது.
வரலாறு காணாத ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை
2025-ம் ஆண்டில், வரலாறு காணாத விலை ஏற்றத்தில் உள்ளது தங்கம் விலை. ஆண்டின் தொடக்கத்தில் உயர ஆரம்பித்த விலை, இன்று வரை புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டே வருகிறது. நேற்று(10.02.25) 64 ஆயிரம் ரூபாயை நெருங்கிய தங்கத்தின் விலை, இன்று அதை கடந்தே விட்டது. இப்படி தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தற்போது கல்யாண சீசன் வேறு. அதனால், கல்யாண வீட்டார் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். தங்கத்தின் விலை மேலும் ஏறுவதற்கு முன், கடனை வாங்கியாவது இன்றைய விலையில் வாங்கி விட வேண்டும் என்ற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்படியே சென்றால், தங்கத்தை கனவில் தான் வாங்க முடியும் போல என்று பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
ரூ.8,000-த்தை தாண்டிய கிராம்...ரூ.64,000-த்தை தாண்டிய சவரன்
ஆண்டின் தொடக்கத்தில் 7,150 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, தற்போது 8,000 ரூபாயை தாண்டிவிட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது 64 ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது. அதன்படி, இன்று கிராமிற்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8,060 ரூபாயை எட்டியுள்ளது. இதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை 640 ரூபாய் உயர்ந்து, சவரன் 64,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி
இதனிடையே, வெள்ளியின் விலை ஒரே சீராக நீடித்துவருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளதால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

