Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
தைப்பூச நன்னாளான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்ய நல்ல நேரம் எது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

உலகெங்கும் இன்று தைப்பூசத் திருநாள் கோலாலகலமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் காலை முதல் குவிந்து வருகின்றனர்.
பத்திரப்பதிவு அலுவலகங்கள்:
முருகனுக்கு மிகவும் உகந்த செவ்வாய் கிழமை நாளில் இந்த தைப்பூசம் நாள் வருகிறது. மேலும், இன்று பெளர்ணமி பிறக்கிறது என்பதாலும், வளர்பிறை பிரதோஷம் என்பதாலும் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதுகிறது.
பொதுவாக,மக்கள் இதுபோன்ற நன்னாளில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலங்கள், வீடுகள், மனைகள் வாங்குவதை பதிவு செய்ய விரும்புவார்கள். இந்த வகையில், தைப்பூச நன்னாளான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்ய மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள்.
நல்ல நேரம் எது?
தைப்பூச நன்னாளான இன்று முழுவதும் சித்த யோக நாள் ஆகும்.
இன்று நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
கெளரி நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
பதிவு செய்ய நல்ல நேரம் எது?
பொதுவாக, எந்த ஒரு காரியத்தையும் ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் செய்வதை மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால், இன்றைய நாளில் எமகண்ட நேரமான காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், ராகு காலமான மாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை தவிர பிற நேரங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வது சிறப்பாகும்.
இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நன்னாளாக இருப்பதால் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, காலை முதலே பதிவு செய்வதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். இன்றைய நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழக்கத்தை விட அதிகளவிலான (கோடிக்கணக்கான) மதிப்பில் பதிவுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















