IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
IND Vs ENG 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநள் போட்டி, நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND Vs ENG 3rd ODI: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் தொடர்பான புள்ளி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியா Vs இங்கிலாந்து:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே 4-1 என இழந்தது. இதையடுத்து சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு தயாராகும் விதமாக, இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்தியாவும், ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டுகிறது. சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு முன்பு நடைபெறும் கடைசி போட்டி என்பதால், இதனை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
போட்டி நேரலை:
அகமதாபாத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் கண்டு களிக்கலாம். அதேநேரம், ஹாட் ஸ்டார் செயலியிலும் போட்டி நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
நரேந்திர மோடி மைதானம் இந்தியாவிற்கு எப்படி?
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மொத்தம் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில், இந்தியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. மறக்கமுடியாத வெற்றிகள் மற்றும் பரபரப்பான சூழலுடன் இந்த மைதானம் இந்தியாவிற்கு ஒரு கோட்டையாக இருந்து வருகிறது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக 8 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 3 போட்டிகளிலும், சேஸ் செய்த அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
நரேந்திர மோடி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது. ஒரு ஓவருக்கான சராசரி ரன் விகிதம் 5-க்கும் குறைவாக உள்ளது. ஆனால், கடந்த சில காலங்களாக குறிப்பாக ஐபிஎல் தாக்கத்தால் இந்த ஆடுகளம், வேகமானதாகவும், அதிரடியாக ரன் குவிப்பதற்கு ஏதுவானதாகவும் மாறி வருகிறது. இதனால், இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியக்கூடும்.
அகமதாபாத் மைதான புள்ளி விவரங்கள்:
அணியின் அதிகபட்ச ஸ்கோர் - நியூசிலாந்தின் 281/1 Vs நியூசிலாந்து, 2023
அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - மேற்கிந்திய தீவுகளின் 169/10 Vs இந்தியா, 2022
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - டெவோன் கான்வே (நியூ.) 152 ரன்கள் Vs இங்கிலாந்து, 2023
சிறந்த தனிநபர் பந்துவீச்சு - பிரஷித் கிருஷ்ணா, 4/14 Vs மேற்கிந்திய தீவுகள், 2022
அதிக ரன்கள் சேர்த்த வீரர் - ரோகித் சர்மா (354 ரன்கள்)
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா, பாண்டியா, அக்சர் படேல், ராணா, ஷமி, வருண் சக்ரவர்த்தி, கே.எல். ராகுல் (வி.கீ), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் , சுப்மன் கில், ஜடேஜா
இங்கிலாந்து: பிடி சால்ட் (வி.கீ.,) , ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேஎல் ஸ்மித், ப்ரூக், டக்கெட், லிவிங்ஸ்டோன், அட்கின்சன், ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரஷீத், ஜோ ரூட்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

